'தோஸ்த் படா தோஸ்த்' ரஷ்யா - சீனா எல்லையில் புதிய பாலம்..! -வீடியோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் போர் மூலம் ரஷ்யா வல்லரசு நாடுகளின் தடைகளை அதிகளவில் எதிர்கொண்டது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு அனைத்து வகையிலும் பெரிய அளவில் ஆதரவு அளிக்கும் நாடுகளில் முக்கியமானதாக விளங்குகிறது சீனா.

இதேவேளையில் சீனாவுக்கும் சீன நிறுவனங்களும் உலகில் பல நாடுகளில் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீனா - ரஷ்யா-வின் கூட்டணியும், நட்பும் சர்வதேச சந்தையில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்யா - சீனா மத்தியிலான வர்த்தக நட்புறவை அதிகரிக்கப் புதிய பாலத்தைத் திறந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் நடக்குதுல்ல.. அதனால்தான் விலைவாசி ஏறிப்போச்சி.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்ரஷ்யா-உக்ரைன் போர் நடக்குதுல்ல.. அதனால்தான் விலைவாசி ஏறிப்போச்சி.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்

ரஷ்யா - சீனா எல்லை

ரஷ்யா - சீனா எல்லை

ரஷ்யா - சீனா எல்லையில் புதிதாகக் கிராஸ் பார்டர் பாலத்தைத் திறந்துள்ளது. இந்தப் பாலத்தின் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் பெரிய அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இரு நாடுகள் மத்தியிலான தரை வழி போக்குவரத்து, எல்லை கிராமங்கள் மேம்பாடு எனப் பல நன்மைகள் உள்ளது.

வர்த்தகத் தடைகள்

வர்த்தகத் தடைகள்

மேற்கத்திய நாடுகளின் தடையால் தவித்து வரும் ரஷ்யாவுக்குக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் துவங்கி, டெக், ரீடைல், நுகர்வோர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வரையில் பலவற்றுக்கும் சீனா-வை சார்ந்து உள்ளது. இந்நிலையில் இப்புதிய பாலம் இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.

19 பில்லியன் ரூபிள்

19 பில்லியன் ரூபிள்

சீனாவில் ஹீலோங்ஜியாங் என்று அழைக்கப்படும் அமுர் ஆற்றின் குறுக்கே ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க் (Blagoveshchensk) நகரையும், சீன நகரமான ஹெய்ஹே (Heihe) உடன் இணைக்கும் வகையில் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட பாலம் சுமார் 19 பில்லியன் ரூபிள் ($342 மில்லியன்) செலவில் கட்டப்பட்டு உள்ளது.

தரை வழி வர்த்தகம்

தரை வழி வர்த்தகம்

ரஷ்யா சீனா நடப்புறவில் எவ்விதமான வரம்பும் இல்லை என உக்ரைன் மீதான போர் உச்சத்தில் இருந்த போது ரஷ்ய அரசு அறிவித்தது. இதனிடையில் இந்தப் பாலம் மூலம் இருநாடுகள் மத்தியில் தரை வழி போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மேம்படும்.

ஹு சுன்ஹுவா

ஹு சுன்ஹுவா


சீனா ரஷ்யாவுடன் அனைத்து துறைகளிலும் கூட்டணியை வலிமைப்படுத்த விரும்புகிறது என்று சீன துணைப் பிரதமர் ஹு சுன்ஹுவா இந்தப் பாலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

 ஒரு கிலோமீட்டர் பாலம்

ஒரு கிலோமீட்டர் பாலம்

இந்த ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம் 2016 முதல் கட்டப்பட்டு வந்தது, மே 2020 இல் நிறைவடைந்தது, ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகளால், இந்தப் பாலம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தாமதமானது.

200 பில்லியன் டாலர்

200 பில்லியன் டாலர்

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு இரு நாடுகள் மத்தியிலான நெருக்கம் அதிகரித்துள்ள வேளையில் 2024ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 200 பில்லியன் டாலரை தாண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. சீனா ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு இயற்கை வளங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia-China 1st cross border bridge; connecting Blagoveshchensk & Heihe cities - video

Russia-China 1st cross border bridge; connecting Blagoveshchensk & Heihe cities - video 'தோஸ்த் படா தோஸ்த்' ரஷ்யா - சீனா எல்லையில் புதிய பாலம்..! -வீடியோ
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X