1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளின் தடைக்கு மத்தியில் ரஷ்யா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் ரஷ்யா மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சரிவில் இருந்து உலக நாடுகளின் தடைக்கு மத்தியில் மீண்டு வருவது மிகவும் கடினம்.

இந்த வேளையில் ரஷ்யாவிற்கு அதிக வருமானத்தை அளிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ உலக நாடுகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

அசராத ரஷ்யா.. தடைகளுக்கு மத்தியில் 321 பில்லியன் டாலர்.. கல்லா கட்டும் புதின்..?!!அசராத ரஷ்யா.. தடைகளுக்கு மத்தியில் 321 பில்லியன் டாலர்.. கல்லா கட்டும் புதின்..?!!

 ரஷ்யா-வின் ஜிடிபி

ரஷ்யா-வின் ஜிடிபி

உக்ரைன் மீதான போர், அதன் மூலம் உலக நாடுகள் விதித்துள்ள தடை, ரஷ்யாவை விட்டு வெளியேறிய சர்வதேச நிறுவனங்கள், ரஷ்யாவின் வர்த்தகம் மற்றும் வருமான பாதிப்பின் மூலம் 2022ஆம் ஆண்டில் ரஷ்யா-வின் ஜிடிபி 10 சதவீதம் வரையில் சரிய வாய்ப்பு உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் நிதியமைச்சர் அலெக்ஸி குட்ரின் தெரிவித்துள்ளார்.

 சோவியத் யூனியன் வீழ்ச்சி

சோவியத் யூனியன் வீழ்ச்சி

1991ஆம் ஆண்டின் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்பு ரஷ்யாவின் பொருளாதாரம் 10 சதவீதம் அளவிற்குச் சரிவது இதுதான் முதல் முறை என அலெக்ஸி குட்ரின் தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் சரிவில் இருந்து ரஷ்யா மீண்டு வருவது மிகவும் கடினமான காரியம்.

கைகொடுக்கும் கச்சா எண்ணெய்

கைகொடுக்கும் கச்சா எண்ணெய்

ரஷ்யா தற்போது போர் பாதிப்பு, உலக நாடுகளின் தடை மட்டும் அல்லாமல் அதிகப்படியான பணவீக்கம், மூலதன பாதிப்பு எனப் பல வழிகளில் நிதிநிலை நிலையற்ற தன்மையில் உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய், எரிவாயு மூலம் தொடர்ந்து முதலீட்டைப் பெற்று வருவது ரஷ்யாவின் வலிமை.

அலெக்ஸி குட்ரின்

அலெக்ஸி குட்ரின்

ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகங்கள் தற்போது புதிய கணிப்புகளை வெளியிடும் பணியில் இயங்கி வருகிறது என ரஷ்ய அரசின் தணிக்கை குழுவின் தலைவராகப் பணியாற்றும் அலெக்ஸி குட்ரின் கூறியுள்ளார். 2000 முதல் 2011 வரை புடின் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றியவர் அலெக்ஸி குட்ரின்.

போருக்கான விலை இதுதான்

போருக்கான விலை இதுதான்

2021 ஆம் ஆண்டில் ரஷ்ய பொருளாதாரம் 4.7% விரிவடைந்த பின்னர் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3% ஆக இருக்கும் என்று முந்தைய ரஷ்ய அரசாங்கத்தின் கணிப்புக் கூறப்பட்ட நிலையில், உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவின் ஜிடிபி 10 சதவீதத்திற்குக் கீழ் சரிய உள்ளதாக முதற்கட்ட கணிப்புகள் கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia economy verge of biggest fall after 1991 fall of the Soviet Union

Russia's economy verge of biggest fall after 1991 fall of the Soviet Union போருக்கான விலை இதுதான்.. 1994க்குப் பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X