ரஷ்ய அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யைச் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் அதிகப்படியான தள்ளுபடியில் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் அனுப்பி வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் கடந்த மாதம் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மொத்தமாகத் தடை விதித்த நிலையில், புதிய சந்தைகளைத் தேடி தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
ஆர்க்டிக் கச்சா எண்ணெய்
மே மாதத்திலிருந்து இந்தியாவிற்கான ஆர்க்டிக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது, குறிப்பாக நவம்பர் மாதத்தில் 6.67 மில்லியன் பேரல்களும், டிசம்பரில் 4.1 மில்லியன் பேரல்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது என Refinitiv தரவுகள் கூறுகிறது.
முக்கியக் கச்சா எண்ணெய் பொருட்கள்
இப்படி ஆர்டிக் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள் பெரும்பாலானவை ஆர்கோ (Arco) மற்றும் ஆர்கோ/நோவி போர்ட் (Arco/Novy Port) தான். இதை ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நெஃப்ட் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மர்மன்ஸ்க் துறைமுகம்
இதேபோல் கடந்த வாரம் மர்மன்ஸ்க் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட வரண்டே கச்சா எண்ணெய் (Varandey crude) சரக்குகள் முதல் முறையாக இந்தியா இறக்குமதி செய்தது.இது நவம்பர் மாத இறுதியில் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர்
2022 ஆம் ஆண்டில் உலகையே புரட்டிப்போட்ட ரஷ்யா - உக்ரைன் போரின் பாதிப்பு 2023 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது. கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இதில் மாட்டிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
35000 கோடி ரூபாய்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பிப்ரவரி மாதம் முதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 40 சதவீத தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது மூலம் இந்தியா அரசு சுமார் 35000 கோடி ரூபாய் சேமித்துள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா-வில் தற்போது இந்தியா மற்றும் சீனா அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
உக்ரைன் ஆதரவு நாடுகள்
உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகளும் இணைந்து, இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஜி7 நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ரஷ்யாவின் நிதி நிலையை முடக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் முக்கிய வர்த்தகப் பொருளான கச்சா எண்ணெய் மீது டிசம்பர் மாதம் முதல் 60 டாலர் விலை வரம்பை விதித்தது.
60 டாலர்
அதாவது உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அதற்கு 60 டாலர் மட்டுமே செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது.
ரஷ்யாவுக்குச் செக்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை எவ்வளவு உயர்ந்தாலும் 60 டாலருக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதேபோல் 60 டாலருக்கு மேல் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யும் போது சர்வதே அமைப்புகள் இன்சூரன்ஸ், கப்பல்கள் அளிக்கப்படாது எனவும் அறிவித்தது.
ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கப்பல் வழியாக வாங்கும் கச்சா எண்ணெய்-க்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் ரஷ்யா வருவாய் இழப்பால் பாதிக்கப்படும், ஐரோப்பிய யூனியன் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் பாதிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications