உக்ரைன் ரஷ்யா பதட்டம்.. சுயசார்பு அடைவதுதான் நாட்டுக்கு நல்லது என்பதை உணர்த்தியுள்ளது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றம் மக்கள் மனதில் பெரும் ஆழ்ந்த வேதனையை உருவாக்கியுள்ளன. உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி 2ம் உலகப் போரின் போது இருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் உருவாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

 

அந்தளவுக்கு உக்ரைனில் ரஷ்யா பெரும் கலவரத்தினையே ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான தாக்குதல் 4வது நாளினை எட்டியுள்ள நிலையில், இன்று வரை சுமூக நிலையை எட்டியதாக தெரியவில்லை.

எனினும் உக்ரைனுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ள ரஷ்யா, கூடாக ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!

பேச்சு வார்த்தைக்கு தயார்

பேச்சு வார்த்தைக்கு தயார்

பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா சொல்வது போல் பெலராஸில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் தனக்கு ஆதரவாக சுதந்திரமான ஒரு படையை உருவாக்குவதாகக் கூறினார். உலகம் முழுவதும் இருந்து வரும் ஆதரவாளர்களைக் கொண்டு, அந்த சுதந்திரப் படை உருவாகும் என்றும் கூறியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்தது

முக்கியத்துவம் வாய்ந்தது

ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக பல ஆயிரம் மக்கள் வீட்டு பாதள அறைகளிலும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பதுங்கியுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என மூத்த வங்கியாளர் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு பெறணும்
 

தன்னிறைவு பெறணும்

இது இந்தியா ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலம் தன்னிறைவு பெற வேண்டும் என்பதை போதிக்கிறது. உதய் கோடக்கின் இந்த கருத்து, ராணுவ தளவாடங்களுக்காக இந்தியா ரஷ்யாவினை சார்ந்திருப்பது பற்றியும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சவால்கள்

இந்தியாவுக்கு சவால்கள்

ஒரு புறம் சீனாவும், மறுபுறம் பாகிஸ்தானும் உள்ளன. பல சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளும் அணுசக்தியும் கொண்டுள்ளன. ஆக ரஷ்ய ராணுவங்களை சார்ந்திருப்பதும் மற்றும் அமெரிக்கா வெகு தொலைவில் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஆக இந்த போர் இந்தியாவுக்கு நல்ல பாடத்தினை புகட்டியுள்ளது.

தன்னிறைவே சிறந்த வழி

தன்னிறைவே சிறந்த வழி

ஆக ஆத்ம நிர்பார் மூலம் தன்னிறைவு அடைவதே சிறந்த வழி என்றும் கூறியுள்ளார். உண்மையில் ஆத்ம நிர்பார் என்பது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதோடு, தொழிற்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும். இன்று உக்ரைனை போல உதவிக்காக நெருக்கடியான காலக்கட்டத்தில் அண்டை நாடுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

துப்பாக்கி ஆர்டர்

துப்பாக்கி ஆர்டர்

இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவும் இந்தியாவும் பாதுகாப்பு துறைக்காக 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் 6 லட்சத்துக்கும் அதிகமான K-203 துப்பாக்கிகளை ஆர்டரும் செய்தது.

இந்தியாவுக்கு சரியான பாடமே.

இந்தியாவுக்கு சரியான பாடமே.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் பற்றி கோடக் அடிக்கடி செய்து வரும் நிலையில், தற்போது தற்சார்பு பற்றி ட்வீட் செய்திருப்பது, இந்தியா அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினை முன்னெடுத்து செல்லும் என்பதை விட, பாதுகாப்பினையும் உறுதி செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மையே. உண்மையில் உக்ரைனின் நிகழ்வு இந்தியாவுக்கு சரியான பாடமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia ukraine war teaches india to be self reliance

Russia ukraine war teaches india to be self reliance/உக்ரைன் - ரஷ்யா பதற்றம்.. இந்தியாவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X