அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து உலக நாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் கடுமையான கட்டுப்பாடு, தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுக்கு மிக முக்கியத் தேவையாக இருக்கும் நிதியியல் சேவைகள், பணப் பரிமாற்ற சேவை பிரிவில் பல அமெரிக்க நிறுவனங்கள் மொத்தமாக வெளியேறியுள்ளது.

 

ஏற்கனவே உலக நாடுகள் ரஷ்யாவின் பெரும்பாலான முக்கிய வங்கிகளுக்குக் கடுமையான தடை விதித்துள்ள நிலையில் தற்போது பேமெண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்களும் வெளியேறியுள்ளது பெரும் நெருக்கடியை உருவாகியுள்ளது.

ஆனாலும் அசராத ரஷ்யா, சீனாவின் உதவியை நாடியுள்ளது.

அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

 விசா, மாஸ்டர்கார்டு

விசா, மாஸ்டர்கார்டு

ரஷ்யாவில் பல வருடங்களாக இயங்கி வரும் அமெரிக்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவை நிறுவனமான விசா, மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள், உக்ரைன் மீதான போரின் காரணமாக இனி சேவை அளிக்க முடியாது என அறிவித்து மொத்தமாக வெளியேறியுள்ளது. இது ரஷ்ய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாகப் பல கோடி மக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியாமல் உள்ளது.

 ரஷ்யா - சீனா

ரஷ்யா - சீனா

இந்நிலையில் இந்தப் பிரச்சனையை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என முடிவு செய்த ரஷ்யா சீனாவை தொடர்பு கொண்டது. இந்நிலையில் விசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் சேவை அளிக்கும் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் சீனாவின் யூனியன்பே கார்டுகள் அளிக்கப்பட உள்ளது.

 யூனியன்பே
 

யூனியன்பே

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் இருந்து சீனா தனது பணப் பரிமாற்ற சேவையை ரஷ்யாவில் துவங்கி, அந்நாட்டு மக்களுக்கு யூனியன்பே கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது யூனியன்பே ஆப்ரேட்டர் சிஸ்டம், ரஷ்யாவின் MIR நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

 Sberbank அறிவிப்பு

Sberbank அறிவிப்பு

தற்போது யூனியன்பே கார்டுகளை ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank முதலாவதாக அளிக்கத் துவங்கியது, இதைத் தொடர்ந்து Alfa Bank மற்றும் Tinkoff ஆகியவை அளிக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியது ரஷ்யாவுக்கு லாபம்.

 தடை உத்தரவு

தடை உத்தரவு

சர்வதேச நிதியியல் சேவை சந்தையில் மிகப்பெரிய பேமெண்ட் சேவை நிறுவனங்களாக விளங்கும் விசா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் பேபால் ஆகிய அனைத்து நிறுவனங்களின் சேவைக்கு ரஷ்யாவில் மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.சர்வதேச நிதியியல் சேவை சந்தையில் மிகப்பெரிய பேமெண்ட் சேவை நிறுவனங்களாக விளங்கும் விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் பேபால் ஆகிய அனைத்து நிறுவனங்களின் சேவைக்கு ரஷ்யாவில் மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 பேபால்

பேபால்

குறிப்பாகப் பேபால் ரஷ்யாவில் இருந்து அனைத்து வித்டிரா சேவைக்கும் அனுமதி அளித்துவிட்டு டெபாசிட் அல்லது ரஷ்யாவுக்கும் வரும் பேமெண்ட்-ஐ நிறுத்தி வைத்துள்ளது. மேலும் விசா, மாஸ்டர் கார்டு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russian banks start the issue of China's UnionPay cards amid Visa, Mastercard Suspended services

Russian banks start the issue of China's UnionPay cards amid Visa, Mastercard Suspended services அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X