லாக்டவுனால் பறிபோன சாமானியர்களின் சம்பள வேலை வாய்ப்புகள்! தரவுகள் சொல்வதென்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஜிடிபி கடந்த ஜூன் 2020 காலாண்டில் 23.9 சதவிகிதம் என, வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. அதோடு வேலை வாய்ப்புகளும் கணிசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அறிவித்த லாக் டவுன்களால், மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டன.

இந்தியாவில் முறைசாரா (Informal) வேலைவாய்ப்புகள் தான் அதிகம். இதை நம்பித் தான் கோடிக் கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

லாக் டவுன் தளர்த்தப்பட்ட உடன், மெல்ல இந்த முறை சாரா (சம்பளம் இல்லாத) வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை, மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டன. சொல்லப் போனால், முறைசாரா வேலை வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால், முறைசார்ந்த சம்பள வேலை வாய்ப்புகள், இப்போது வரை மீளவில்லை என்கிறது வேலை வாய்ப்பு தொடர்பான தரவுகள்.

சம்பளம் இல்லா வேலைவாய்ப்புகள் (Non-salaried forms of employment)

சம்பளம் இல்லா வேலைவாய்ப்புகள் (Non-salaried forms of employment)

கடந்த 2019 - 20-ல் இந்த சம்பளம் இல்லாத வேலை வாய்ப்புகள் 317.6 மில்லியனாக (31.76 கோடி) இருந்தது. ஆனால் இந்த ஜூலை 2020-ல், சம்பளம் இல்லாத வேலை வாய்ப்புகள் 325.6 மில்லியனாக (32.56 கோடி) அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது Centre for Monitoring Indian Economy (சி எம் ஐ இ) என்கிற அமைப்பு. ஆக 2.5 % வேலைவாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

சம்பள வேலைவாய்ப்புகள் (Salaried Jobs)

சம்பள வேலைவாய்ப்புகள் (Salaried Jobs)

சி எம் ஐ இ அமைப்பு தரவுகள் படி, கடந்த 2019 - 20 காலத்தில் 86.1 மில்லியனாக (8.61 கோடி) இருந்த சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்புகள், கடந்த ஏப்ரல் 2020 கால கட்டத்தில் 68.4 மில்லியனாக (6.84 கோடி) சரிந்தது. லாக் டவுன் போன்ற தொடர் பிரச்சனைகளால், கடந்த ஜூலை 2020 காலத்தில், இந்த சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்புகள் 67.2 மில்லியனாக (6.72 கோடி) சம்பள வேலை வாய்ப்புகள் மேலும் சரிந்து இருக்கிறது. ஆக 22 % சம்பள வேலை வாய்ப்புகள் பறி போயிருக்கிறது.

சம்பள வேலை வாய்ப்புகள் முக்கியத்துவம்

சம்பள வேலை வாய்ப்புகள் முக்கியத்துவம்

இந்தியாவில், Salaried Job, நல்ல வேலைவாய்ப்புகளையும், நல்ல சம்பளத்தையும் கொடுக்கின்றன. குறிப்பாக நகர் புறத்தில், சம்பள வேலைகளில் இருக்கும் குடும்பங்கள், சேமிப்புகளை மேற்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். தங்களின் வாழ்கை தரத்தை சீராக மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த சம்பள வேலைகளில் இருப்பவர்கள் தான், கடன் வாங்கி, கடனை திருப்பிச் செலுத்தும் இடத்திலும் இருக்கிறார்கள். எனவே சம்பள வேலை வாய்ப்புகளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பெரிய வளர்ச்சி காணாத சம்பள வேலை வாய்ப்புகள்

பெரிய வளர்ச்சி காணாத சம்பள வேலை வாய்ப்புகள்

கடந்த 2017 - 18 கால கட்டத்தில், இந்த சம்பள வேலை வாய்ப்புகள் 1.6 % மட்டுமே வளர்ச்சி கண்டது. 2018 - 19 காலத்தில் 0.1 % தான் வளர்ச்சி கண்டது. 2019 - 20 காலத்தில் 1.8 % சம்பள வேலை வாய்ப்புகள் குறைந்து இருக்கிறது. 2016 - 17 கால கட்டத்தில் இந்தியாவில் 8.63 கோடி சம்பள வேலை வாய்ப்புகள் இருந்தது, இந்த 2019 - 20 கால கட்டத்தில், சம்பள வேலை வாய்ப்புகள் 8.61 கோடியாக சரிந்து இருக்கிறது என சி எம் ஐ இ தரவுகள் சொல்கின்றன.

பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்

பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்

இந்தியாவின் நகர் புறங்களில், சம்பள வேலை வாய்ப்புகள் (Salaried Jobs) குறைந்தால், ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என்கிறார் சி எம் ஐ இ அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி மகேஷ் வியாஸ்.இன்னும் இந்த கொரோனா வைரஸால், இந்திய பொருளாதாரம் என்ன மாதிரியான எதிர்வினைகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறதோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salaried Job loss increased heavily due to COVID-19 lock down

In indian economy, the Salaried job loss has increased heavily due to the unprecedented Coronavirus lock down.
Story first published: Thursday, September 3, 2020, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X