அமெரிக்க வேலையை தூக்கி எறிந்த சேலம் இளைஞன்.. இன்று விவசாய துறையில் கோடீஸ்வரன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம் மாவட்டத்தின் சிறு டவுன் பகுதியை சேர்ந்த கிரு மைக்காப்பிள்ளை மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அமெரிக்க வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தற்போது விவசாயத் துறையில் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வர்த்தகத்தை உருவாக்கி பல கோடி இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார்.

 

இளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..!

 கிரு மைக்காப்பிள்ளை

கிரு மைக்காப்பிள்ளை

எல்லோரையும் போலவே கிரு மைக்காப்பிள்ளை-யும இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு சில ஆண்டுகள் சாப்ட்வேர் துறையில் பணியாற்றியனார். இதன் பின்பு எம்பிஏ பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த கிரு மைக்காப்பிள்ளை 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் மாசசூசெட்ஸ் டார்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

 அமெரிக்காவில் எம்பிஏ

அமெரிக்காவில் எம்பிஏ

எம்பிஏ படிப்பை முடித்த கையோடு அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் பணியில் சேர்ந்தார். மாதம் பிறந்தால் கை நிறையக் காசு, பேச்சுலர் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் சொந்த நாட்டில் சொந்தமாகத் தொழில் துவங்க வேண்டும் என்பதை முக்கியக் கனவாக வைத்திருந்தார் கிரு மைக்காப்பிள்ளை.

 மீண்டும் இந்தியா
 

மீண்டும் இந்தியா

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும்போது எல்லாம் சொந்த தொழில் துவங்குவதற்கான திட்டத்தையும் ஏற்பாடுகளையும் செய்து வந்த கிரு மைக்காப்பிள்ளை, 2018ல் அமெரிக்காவில் வேலையைத் தூக்கி எறிந்து விட்டு இந்தியாவிற்குத் தனது கனவை நினைவாக்க விமானம் ஏறினார்.

 விவசாயம்

விவசாயம்

கிரு மைக்காப்பிள்ளை-யின் பெற்றோர், உறவினர், நண்பர் உட்பட அனைவரும் ஐடி அல்லது வங்கி சேவை துறையில் தான் தொழில் துவங்குவதாக நம்பினார்கள். ஆனால் கிரு மைக்காப்பிள்ளை-யில் திட்டம் முற்றிலும் வேறு, விவசாயம். இதற்கான காரணமும் அமெரிக்காவில் தான் உருவானது.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

அமெரிக்காவில் பணியாற்றிய போது அங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகப்படியான வரவேற்பும், மரியாதையும் இருப்பதை உணர்ந்தார் 34 வயதான கிரு மைக்காப்பிள்ளை. குறிப்பாக விவசாயப் பொருட்கள், உணவு பொருட்களுக்கு இந்தியாவை விடவும் வெளிநாட்டில் அதிகப்படியான வரவேற்பு இருப்பதாகக் கிரு கூறுகிறார்.

சேலம்

சேலம்

சேலம் சிறிய நகரமாக இருந்தாலும், விவசாயப் பொருட்களுக்குப் பஞ்சம் இல்லாத இடம். இதனால் பல மாதம் திட்டமிட்டு உள்ளூர் விவசாயிகளிடம் அதிகம் விளையக்கூடிய பொருட்களைப் பட்டியலிட்டு, அதேவேளையில் வெளிநாட்டில் அதிக டிமாண்ட் இருக்கும் பொருட்களைப் பட்டியலிட்டு ஆய்வு செய்து, அந்தப் பொருளை எப்படி மேம்படுத்தப்பட்ட முறையில் அளிக்க முடியும் என்பதை திட்டமிட்டார்.

 மஞ்சள்

மஞ்சள்

இந்த ஆய்வு பணியில் கடைசியாக அவர் தேர்வு செய்த பொருள் தான் மஞ்சள். ஈரோடு, சேலம் பகுதியில் மஞ்சள் அதிகம் விளையக்கூடிய பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ல் கிரு மைக்காப்பிள்ளை தனது சொந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான The Divine Foods-ஐ துவங்கினார்.

 ஸ்டார்ட்அப் நிறுவனம்

ஸ்டார்ட்அப் நிறுவனம்

அமெரிக்காவில் பணியாற்றி சேர்த்து வைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி இன்று சேலத்தில் விளைவிக்கும் மஞ்சள்-ஐ இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது. கிரு-வின் The Divine Foods நிறுவனம்.

 ஆர்கானிக் விவசாயம்

ஆர்கானிக் விவசாயம்

சேலம் பகுதியில் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சளை, உள்ளூர் விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து மஞ்சள் தூளாக்கி விற்பனை செய்கிறார் கிரு. இந்திய மக்களின் உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் மஞ்சள் தற்போது உலக நாட்டு மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது The Divine Foods போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்குப் பெரும் வர்த்தக வாய்ப்பாக உள்ளது எனக் கிரு தெரிவித்துள்ளார்.

விலை

விலை

The Divine Foods நிறுவனம் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ மஞ்சள்-ஐ 70 ரூபாய்க்கு வாங்கி 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதேபோல் ஆர்கானிக் மஞ்சள் தூள் மட்டும் அல்லாமல் curcumin சோப், golden milk latte மற்றும் rash balm போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதாகக் கிரு தெரிவித்துள்ளார்.

 வெளிநாட்டில் விற்பனை

வெளிநாட்டில் விற்பனை

தற்போது The Divine Foods நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா - பிரிட்டன் நாடுகளில் விளம்பரத்திற்காக இதுவரை எவ்விதமான செலவையும் செய்யவில்லை என்றும் கூறுகிறார் கிரு.

 1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்

The Divine Foods நிறுவனம் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ மஞ்சள்-ஐ 70 ரூபாய்க்கு வாங்கி 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதேபோல் ஆர்கானிக் மஞ்சள் தூள் மட்டும் அல்லாமல் curcumin சோப், golden milk latte மற்றும் rash balm போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதாக கிரு தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Salem Kiru Maikkapillai left US Bank job to start Business in Farming

Salem Kiru Maikkapillai left US Bank job to start Business in Farming அமெரிக்க வேலையைத் தூக்கி எறிந்த சேலம் இளைஞன்.. விவசாயத்தில் ரூ.1 கோடி வருமானம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X