மீண்டும் இந்தியாவில் டிவி தயாரிப்பில் களமிறங்கும் சாம்சாங் .. சென்னைக்கு மகிழ்ச்சியான செய்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க சாம்சாங் இந்தியா திட்டமிட்டிருப்பதாக அந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சாங் இந்தியா, உள்நாட்டு டிவி தயாரிப்பு ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸுடன் 55 அங்குலங்கள் வரை திரை அளவுகளில் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.

இவை இந்திய சந்தையில் 85% க்கும் அதிகமானவையாகும். இந்தியாவில் உள்ளூர் தொலைக்காட்சி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களுடள் ஒப்பந்தங்கள் செய்ய அந்த நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது.

அக்டோபரில் மூடல்

அக்டோபரில் மூடல்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி பிராண்டான சாம்சங், தொலைக்காட்சி தயாரிப்பதற்கான செல் பேனல்களுக்கு அரசாங்கம் வரிவிதித்தன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஆலையை மூடியிருந்தது. இப்போது வரிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் தொலைக்காட்சி இணைப்பை மீண்டும் தொடங்க முடியுமா என்றும் மதிப்பீடு செய்து வருகிறது.

மீண்டும் திறக்கப்படும்

மீண்டும் திறக்கப்படும்

எனவே சாம்சாங் இந்தியா டிவி உற்பத்தியை மீண்டும் இந்தியாவில் ஆரம்பிக்க உள்ளதால் மீண்டும் சென்னை ஆலை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி திறக்கப்பட்டால் சென்னையில் பலருக்கும் வேலை கிடைக்கும் என்று தெரிகிறது.

டிக்சன் நிறுவனம்
 

டிக்சன் நிறுவனம்

இது ஒருபுறம் எனில் டிக்சன் ஏற்கனவே சியோமி, பானாசோனிக் மற்றும் சான்யோ போன்ற பிராண்டுகளுக்கான தொலைக்காட்சிகளை திருப்பதிக்கு அருகிலுள்ள அதன் ஆலையில் தயாரித்து வருகிறது. தற்போது அங்கு தான் டிக்சன் சாம்சங் தொலைக்காட்சிகளைத் தயாரிக்க போகிறதாம். 32, 43, 50 மற்றும் 55 அங்குலங்கள் ஆகிய நான்கு ஸ்கிரீன் அளவுகளில் தயாரிக்கப்படுட உள்ளது என்றும் அவை ஹெச்டி மற்றும் ஸ்மார்ட் டிவிக்களாக இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

உறுதி அளித்தால்

உறுதி அளித்தால்

"சாம்சங் தனது சென்னை ஆலையில் தொலைக்காட்சி தயாரிப்பை தொடங்கலாம், ஆனால் திறந்த செல் டிவி பேனல்களின் தயாரிப்புக்கு வரியை ஏற்ற மாட்டோம் என அரசு உறுதி அளித்தால் சென்னையில் உற்பத்தியை தொடங்கும் என்ற அந்த அதிகாரி கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung India bringing back television production to India

Samsung India is bringing back television production to India after a year with the government scrapping import duty on the biggest component open cell panel.
Story first published: Thursday, November 21, 2019, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X