தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட்.. 400 கோடி முதலீடு செய்யும் சாம்சங்.. எந்த ஊரில் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சீனா-வை விட்டு வெளியேறி இந்தியா, பங்களாதேஷ் உட்படப் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது.

 

இவை அனைத்திற்கும் முன்னோடியாகச் சாம்சங் இந்தியாவில் பல வருடங்களுக்கு முன்பாகவே தனது ஸ்மார்ட்போன் உற்பத்தி தளத்தை உள்நாட்டு நிறுவன கூட்டணி உடன் கட்டமைத்து இந்திய விற்பனைக்கான ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தக் கட்டமைப்பு பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகளையும், லாபத்தையும் அளிக்கும் நிலையில் புதியாக ஒரு அறிவிப்பை சாம்சங் வெளியிட்டு உள்ளது.

Pause பட்டனை அமுக்கிய சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.. ஏன் இந்தத் திடீர் முடிவு..!! Pause பட்டனை அமுக்கிய சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.. ஏன் இந்தத் திடீர் முடிவு..!!

டெலிகாம் கருவிகள்

டெலிகாம் கருவிகள்

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டெலிகாம் கருவிகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் நிலையில் அதை முக்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்பதற்காக டெலிகாம் கருவிகளைச் சொந்தமாகத் தயாரித்து வரும் சாம்சங் அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் புதிய 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ கருவிகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது சாம்சங்.

 PLI திட்டம்

PLI திட்டம்

இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள production-linked incentive (PLI) திட்டம் மூலம் டெலிகாம் கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது வருகிறது.

நோக்கியா மற்றும் எரிக்சன்
 

நோக்கியா மற்றும் எரிக்சன்

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே நோக்கியா மற்றும் எரிக்சன் கிளை நிறுவனமான Jabil ஆகியவை இந்தியாவில் 5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வரிசையில் தற்போது உலகின் முன்னணி டெலிகாம் கியர் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மத்திய அரசின் production-linked incentive (PLI) திட்டத்தின் வாயிலாகக் களத்தில் இறங்கியுள்ளது.

400 கோடி ரூபாய் முதலீடு

400 கோடி ரூபாய் முதலீடு

சாம்சங் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் 4ஜி/5ஜி டெலிகாம் கருவிகளைத் தயாரிக்கப் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இப்புதிய தளத்தின் மூலம் இந்திய சந்தைக்கான தேவையை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தை தேவையையும் பூர்த்திச் செய்யப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல்

ஆனால் இதுக்குறித்துச் சாம்சங் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் 5ஜி டெலிகாம் கருவிகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.

சாம்சங் வருகை

சாம்சங் வருகை

இதனால் சாம்சங் வருகை மூலம் இந்தியாவில் 5ஜி சேவை விரிவாக்கம் வேகப்படுத்த முடிவது மட்டும் அல்லாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். மேலும் சாம்சங் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து 5ஜி கருவிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

சாம்சங் காஞ்சிபுரத்தில் 400 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைப்பது மூலம் மத்திய அரசின் 12,195 கோடி ரூபாய் மதிப்பிலான டெலிகாம் கருவிகளுக்கான PLI திட்டத்தில் இணைந்துள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

கடந்த வருடம் இந்தியாவில் ஜியோ மட்டுமே 5ஜி சேவையில் வருவதற்காகத் திட்டத்தைத் தீட்டியிருந்த நிலையில் டெலிகாம் கருவிகளுக்கான PLI திட்டம் கிட்டதட்ட தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது ஏர்டெல்-ம் களத்தில் இறங்கி சாம்சங் இரு நிறுவனங்களிடம் இருந்து சில முக்கியமான டெலிகாம் வட்டத்திற்கான ஆர்டரை பெற்றுள்ளதால் இது பெரிய வெற்றி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Samsung investing in TamilNadu; Rs400 crore new plant to start manufacturing 5G and 4G radio equipment

Samsung investing in TamilNadu; Rs400 crore new plant to start manufacturing 5G and 4G radio equipment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X