யார் இந்த சஞ்சீவ் சன்யால்.. மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முழு நேர உறுப்பினராக சஞ்சீவ் சன்யால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

யார் இந்த சஞ்சீவ் சன்யால்? இவரின் அனுபவம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தற்போது மத்திய நிதியமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ், நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் இவரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. இல்லாடி கஷ்டம்..!

பிபெக் தெப்ராய் ட்வீட்

பிபெக் தெப்ராய் ட்வீட்

இந்த நிலையில் தான் இன்று சஞ்சீவின் பணி நியமனம் குறித்து பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் பிபெக் தெப்ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சஞ்சீவ் சன்யாலுக்கு வாழ்த்து தெரிவித்தும் உள்ளார். கடந்த 1990ம் ஆண்டு முதலே நிதி துறையில் பிசியாக இருந்து வருகின்றார்.

ஆலோசனை குழு

ஆலோசனை குழு

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விவகாரங்கள் குறித்த, ஆலோசனைகளை வழங்குவதற்காகவே மத்திய அரசால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் தான், தற்போது முழு நேர உறுப்பினராக சஞ்சீவ் சன்யால் சேர்க்கப்பட்டுள்ளார்.

2017ல் தான் என்ட்ரி
 

2017ல் தான் என்ட்ரி

டாய்ச் வங்கியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பில் இருந்த சஞ்சீவ் சன்யால், பிப்ரவரி 2017ல் தான் மத்திய நிதியமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து நிதியமைச்சகத்தின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். சஞ்சீவ் டெல்லி செயின் ஜோசப் கல்லூரியில் வணிகம் படித்தவர். 2014ல் சிங்கப்பூர் அரசு இவரை கெளரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கல்வி அனுபவம்

கல்வி அனுபவம்

டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றவர். Land of the Seven Rivers: A Brief History of India's Geography', 'The Indian Renaissance: India's Rise After a Thousand Year's of Decline' and 'The Incredible History of India's Geography'. உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். இது தவிர இன்னும் பல அனுபவங்களை தன்னகத்தே கொண்ட இவரின் ஆலோசனை, பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sanjeev sanyal appointed full time member of Economic advisory council

sanjeev sanyal appointed full time member of Economic advisory council/யார் இந்த சஞ்சீவ் சன்யால்.. மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X