சவுதி அரேபியா: 10 வருடத்தில் நடந்த தரமான சம்பவம்.. முகமது பின் சல்மான் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகள் ரத்த கண்ணீர் வடிக்காத குறையாகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில், இந்தக் காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.

 

இந்த வகையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் சவுதி அரேபியா நீண்ட காலத்திற்குப் பின்பு உபரி நிதியுடன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை..! #Startup

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சவுதி அரேபியா அதிகப்படியான லாபத்தை 2வது காலாண்டில் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் பட்ஜெட் உபரி நிதியை 77.9 பில்லியன் ரியால் அல்லது 21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் சவுதி அரேபியா முதல் முறையாக உபரி நிதியுடன் பட்ஜெட்-ஐ தாக்கல் செய்ய உள்ளது.

சவுதி அரேபியா நிதியமைச்சர்

சவுதி அரேபியா நிதியமைச்சர்


சவுதி அரேபியா நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் காலாண்டைக் காட்டிலும் சவுதி அரேபியா அரசின் வருமானம் ஜூன் காலாண்டில் 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜூன் காலாண்டில் கச்சா எண்ணெய் மீதான வருமானம் 89 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

அதிகப்படியான செலவுகள்
 

அதிகப்படியான செலவுகள்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜூன் காலாண்டில் சவுதி அரேபியாவின் செலவுகளைச் சுமார் 16 சதவீதம் அதிகரித்து 292.5 பில்லியன் ரியால் ஆக உயர்ந்த போதும் உபரி நிதி கிடைத்துள்ளது. சவுதி அரேபியா கடந்த 10 வருடத்தில் அமெரிக்கச் சந்தையுடனும், கொரோனாவுடனும் போராடி வந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைவாகவே இருந்தது.

கொரோனா

கொரோனா


2020ல் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் கச்சா எண்ணெய் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதன் விலை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் சவுதி அரேபியா அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது.

NEOM திட்டம்

NEOM திட்டம்

இதேவேளையில் சவுதி அரேபியா கச்சா எண்ணெய் மட்டுமே நம்பி தனது பொருளாதாரத்தைக் கட்டமைக்கக் கூடாது என முடிவு செய்து பல மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், தற்போது உலகம் முடிவதில் இருந்து புதிய வர்த்தகத்தையும், நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் புதிதாக NEOM என்ற திட்டத்தைத் தீட்டியுள்ளது.

80 பில்லியன் டாலர்

80 பில்லியன் டாலர்

சவூதி அரேபியா அரசு நியோம் திட்டத்திற்குத் தற்போது சுமார் 300 பில்லியன் ரியால் அதாவது 80 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தனது கனவு திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் இத்திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை-க்கு வந்த புதிய ஐடி நிறுவனம்.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia first budget surplus in nearly a decade; mohammed bin salman plans to growth stronger

Saudi Arabia first budget surplus in nearly a decade; mohammed bin salman plans to growth stronger சவுதி அரேபியா: 10 வருடத்தில் நடந்த தரமான சம்பவம்.. முகமது பின் சல்மான் கொண்டாட்டம்..!
Story first published: Friday, August 5, 2022, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X