விலை போர்-க்கு தயாரான சவுதி அரேபியா.. 20 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடானா சவுதி அரேபியா அடுத்த மாதத்தில் இருந்து தனது உற்பத்தி அளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விற்பனை மூலம் தனது 70 சதவீத கஜானாவை நிரப்பும் சவுதி இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா..?

 

OPEC அமைப்பின் முடிவிற்கு ரஷ்யா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சவுதி ரஷ்ய வர்த்தகத்தைக் கைப்பற்றும் நோக்குடனும், அந்நாட்டு வர்த்தகம் மற்றும் வருவாய் அளவுகளில் பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் சந்தையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்ப உள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை வீழ்த்த சவுதி எப்படித் திட்டமிட்டுள்ளது தெரியுமா..?

லண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..!

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இச்சந்தையில் விலை போர்-ஐ உருவாக்கியுள்ளது. உள்நாட்டு சந்தையை விடுத்து வெளிநாடுகள் அதாவது ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் பிற கச்சா எண்ணெய் விநியோக நாடுகளை விடுத்து சவுதி நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கடந்த 20 வருடத்தில் இல்லாத சலுகையில் விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இச்சந்தையில் விலை போர்-ஐ உருவாக்கியுள்ளது. உள்நாட்டு சந்தையை விடுத்து வெளிநாடுகள் அதாவது ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் பிற கச்சா எண்ணெய் விநியோக நாடுகளை விடுத்து சவுதி நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கடந்த 20 வருடத்தில் இல்லாத சலுகையில் விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

உற்பத்தி
 

உற்பத்தி

இது ஒருபக்கம் இருக்க விலை குறைப்பு மூலம் ஏற்பட்டுள்ள சந்தை தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாளுக்குச் சுமார் 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் தயாராக இருப்பதாகச் சவுதி அரசு முடிவு எடுத்துள்ளது.

சவுதி உற்பத்தி திட்டம்

சவுதி உற்பத்தி திட்டம்

இந்த மாதம் சவுதி அரேபியா ஒரு நாளுக்கு 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது, இதை ஏப்ரல் மாதத்தில் இருந்து 10 மில்லியன் பேரலாக உயர்த்த வேண்டும் என OPEC அமைப்புடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்ட நிலையில், ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தற்போது எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாளுக்கு 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூலம் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை மற்றும் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ள இந்தத் தருணத்தில் சவுதியின் இந்த விலை போர் திட்டம் கச்சா எண்ணெய் சந்தையை மிகப்பெரிய அளவில் புரட்டிப் போட உள்ளது.

ஆராம்கோ

ஆராம்கோ

இதன் எதிரொலியாக முதல் முறையாகச் சவுதி நாட்டின அரசு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ-வின் ஒரு பங்கு மதிப்பு முதல் முறையாக ஐபிஓ விலையை விடவும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆராம்கோ நிறுவன பங்குகள் அந்நாட்டுப் பங்குச்சந்தையில் இறங்கும் போது 32 ரியால் மதிப்பில் வர்த்தகத்திற்கு வந்தது, ஆனால் இப்போது 30 ரியால் மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia plans for big price war: oil output at new high

Saudi Arabia plans to increase oil output next month, looking to boost it well above 10 million barrels a day, as the kingdom responds aggressively to the collapse of its OPEC+ alliance with Russia.
Story first published: Monday, March 9, 2020, 7:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X