எண்ணெய் ஜாம்பவானின் மெகா திட்டம்.. இந்தியாவுக்கு பயனளிக்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் எண்ணெய் சப்ளை செயின் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அராம்கோவின், மூத்த துணைத் தலைவர் முகமது ஓய் அல் கஹ்தானியின் அறிக்கையின்படி, இந்தியாவின் இந்தியா முழுவதும் பரவலாக முதலீடு செய்வது எங்களின் நோக்கம் என கூறியுள்ளார்.

மேலும் பல இந்திய நிறுவனங்களுடன் கூட்டாளியாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் உடன் கூட்டணி

ரிலையன்ஸ் உடன் கூட்டணி

ஏற்கனவே சவுதி அராம்கோ நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டினை தொடங்கியுள்ள நிலையில், எண்ணெய் வணிகம் மட்டும் அல்ல, கெமிக்கல் வணிகத்தினையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடனும் கூட்டணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா

அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா

இந்தியாவிற்கு தேவையான எரிபொருளை சப்ளை செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதில், சவுதி அராம்கோ பெருமை கொள்கிறது. தற்போது இந்தியா உலகிலேயே 3-வது மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. இந்தியா, சவுதி அராம்கோ மற்றும் ஓபெக் நாடுகளை எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சர்வதேச அளவிலான மொத்த உற்பத்தியில், சுமார் 40% இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆக சர்வதேச எண்ணெய் சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டம்

எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டம்

கடந்த புதன்கிழமை அன்று பிரதமர் மோடி உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், சவுதி அராம்கோவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமீன் நாசர் உடனான விர்சுவல் கூட்டத்தில், உற்பத்தினையினை அதிகரிக்க கூறியதோடு, சப்ளையை அதிகரிக்க கேட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஒருங்கிணைந்த வணிகம்

ஒருங்கிணைந்த வணிகம்

இதற்கிடையில் சவுதி அராம்கோவின் துணை நிறுவனமான SABIC மூலம், சர்வதேச அளவில் கெமிக்கல் வணிகத்தில் முன்னணி வணிகராக இருக்க வேண்டும். இதுவே எங்களின் நோக்கம். கச்சா எண்ணெய் சப்ளை, சுத்திகரிக்கரிப்பட்ட பொருட்கள், கெமிக்கல்கள், நான் மெட்டாலிக், உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைந்து வழங்க வேண்டும் என கஹ்தானி கூறியுள்ளார்.

ஆலைக்கு எதிர்ப்பு

ஆலைக்கு எதிர்ப்பு

உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தினை, ரத்னகிரியில் அமைப்பதற்காக சவுதி அராம்கோ மற்றும் இந்திய அரசும் ஆலோசனை நடத்தின. ஆனால் இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகளில் எதிர்ப்பு தெரிவிக்கவே தோல்வியை சந்தித்தது.

முதலீட்டினை அதிகரிக்க திட்டம்

முதலீட்டினை அதிகரிக்க திட்டம்

எனினும் நாங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியினை, ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகங்களில் முதலீடுகளை துரிதப்படுத்த முயன்று வருகிறோம். குறிப்பாக இந்தியா போன்ற பெரிய சந்தைகளில், முதலீடு செய்ய முயன்று வருகிறோம் என்று கஹ்தானி கூறியுள்ளார்.

இந்தியாவின் இலக்கு

இந்தியாவின் இலக்கு

இந்தியாவின் அதன் சுத்திகரிப்பு திறனை 2025 ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 400 மில்லியன் டன்னாக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது இது 249.36 MTPA ஆக உள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குகளுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் ஒரே இடத்தில் 3 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பிலான, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிலையங்களை அமைப்பதற்கு பதிலாக, மத்திய அரசு தற்போது சிறிய அளவிலான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கும் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது.

பல இடங்களில் ஆய்வு

பல இடங்களில் ஆய்வு


இந்த சிறிய அளவிலான உற்பத்தி ஆலைகள் குஜராத், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிகின்றது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் இதை அமைக்க ஆராயப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதில் ரத்னகிரி திட்டமும் அடங்கும்.

மாபெரும் கூட்டணி

மாபெரும் கூட்டணி

RRPCL என்பது சவுதி அராம்கோ, அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் அடங்கும். இதில் சவுதி அராம்கோ மற்றும் அபுதாபி நேஷனல் இணைந்து 50%மும், இந்திய நிறுவனங்கள் 50%மும் பங்கினை கொண்டிருக்கும்.

பல்வேறு வணிகம்

பல்வேறு வணிகம்


மொத்தத்தில் இந்த மாபெரும் கூட்டணி மூலம் இந்தியாவுக்கு நல்லது நடந்தால் மிக நல்ல விஷயமே. இவற்றோடு, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் பல சேவைகளை செய்து வருகின்றன. இது தவிர இந்திய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 10 திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. எண்ணெய் வணிகத்துடன் பல்வேறு சேவைகளையும் வழங்குவது அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Aramco plans to invest across india’s Energy supply chain and Indian firms

Oil major Saudi Aramco plans to invest across india’s Energy supply chain and Indian firms
Story first published: Thursday, October 21, 2021, 20:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X