சீனா உடனான 10 பில்லியன் டாலர் டீல் முறித்துக்கொண்டது சவுதி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சவுதி அரேபியாவின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ, சீனாவில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் காம்பிளக்ஸ் அமைக்கத் திட்டமிட்டு இருந்தது.

 

இந்த மிகப்பெரிய திட்டத்தைச் சவுதி அரேபியா முறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது சீனாவின் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தைக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா தனது கச்சா எண்ணெய் தேவையை அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமாகத் தீர்த்து வருகிறது, இந்தச் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் வளம் நிறைந்த சவுதி ஆரம்கோ உடனான டீல் மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது முறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

10 பில்லியன் டாலர் டீல்

10 பில்லியன் டாலர் டீல்

சீனாவின் Liaoning பகுதியில் சவுதி ஆராம்கோ சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் காம்பிளக்ஸ் அமைக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள விலை மதிப்பு மற்றும் வர்த்தகச் சரிவு ஆகியவை சவுதியின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

நிதி நிலை

நிதி நிலை

இந்த மோசமான நிதிநிலையில் சவுதி சீனாவின் Liaoning திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது எனச் சீன கூட்டணி நிறுவனங்களுடன் ஆலோசனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுமையாக அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் இந்த முக்கிய முடிவு குறித்து அறிந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கூட்டணி
 

கூட்டணி

சவுதி இந்தச் சுத்திகரிப்பு தொழிற்சாலையை Norinco மற்றும் Panjin Sincen ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து Huajin Aramco Petrochemical Co என்ற பெயரில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு இருந்தது.

இந்தத் தொழிற்சாலை தான் சீனாவின் 70 சதவீத எரிபொருள் விநியோகத்தைப் பூர்த்தி செய்ய உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஒரு நாளுக்கு 3,00,000 பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டு இருந்தது.

சீனா- சவுதி அரேபியா

சீனா- சவுதி அரேபியா

இந்த 10 பில்லியன் டாலர் டீல் சீனா- சவுதி அரேபியா கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செய்யப்பட்டது, அப்போதைய காலகட்டத்தில் சவுதி தனது வர்த்தகம் மற்றும் சந்தைகளை ஆசியா முழுவதும் விரிவாக்கம் செய்ய மிகவும் தீவிரமாக இருந்தது. இதன் அடிப்படையில் தான் இந்த டீல் இரு நாடுகள் மத்தியிலும் ஒப்புதல் பெற்றது.

ஆனால் தற்போது சீனாவின் நிதிநிலை பெரிய அளவில் மாற்றமடைந்துள்ள நிலையில் தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

கொரோனா-வால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு சவுதியின் வருவாயில் பாதிப்பையும், கடன் அளவுகளில் தொடர் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், சவுதி தனது செலவுகளை மிகப்பெரிய அளவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு சவுதியின் மொத்த பொதுச் செலவினங்களில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது,

மேலும் மொத்த செலவினங்களின் அளவை 75 பில்லியன் டாலர் வரையில் குறைக்கத் தற்போது சவுதி திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi - China's oil refinery deal suspends? $10 billion Oil refinery venture

Saudi - China's oil refinery deal suspends? $10 billion Oil refinery venture
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X