சவுதி இளவரசர் சல்மான் பலே திட்டம்.. துபாய், கத்தார் நிறுவனங்களுடன் போட்டியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும் வளைகுடா நாடுகள் தனது வருமானத்தை ஈட்டும் வழிகளை புதிய பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பல வருடங்களாக திட்டமிட்டு வரும் நிலையில் துபாய் ஏற்கனவேக கட்டுமானம், விமான சேவை, ஹோட்டல், சுற்றுலா என பல துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அமுல் அறிவிப்பால் மக்கள் கவலை..! பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அமுல் அறிவிப்பால் மக்கள் கவலை..!

இந்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமை பதவியேற்றிய நாளில் இருந்து பல புதுமைகளையும், பல மாற்றங்களையும் இந்நாட்டில் கொண்டு வந்துள்ளார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இந்த சூழ்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி நாட்டின் வர்த்தகத்தையும், வருவாய் ஈட்டும் வழிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக புதிதாக ஒரு விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை துவங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா கச்சா எண்ணெய்

சவுதி அரேபியா கச்சா எண்ணெய்

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் வளம் மிகவும் அதிகமாக இருப்பது, இதன் வாயிலாகவே அதிகளவிலான வருமானம் ஈட்டி வருகிறது என அனைவருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் விமான போக்குவரத்து மூலம் பிற வளைகுடா நாடுகள் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சவுதி அரேபியாவும் இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணமும் கச்சா எண்ணெய் தான்.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகளில் துபாய், கத்தார் போன்ற நாடுகள் பயணிகள் விமான சேவை பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சவுதி அரசு தன்நாட்டை குளோபல் லாஜிஸ்டிக்ஸ் ஹப்-ஆக மாற்றும் மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு சவுதி மண்ணில் கிடைக்கும் கச்சா எண்ணெய் பெரிய அளவில் உதவும்.

லாஜிஸ்டிக்ஸ் பிரிவு

லாஜிஸ்டிக்ஸ் பிரிவு

சவுதி அரசு ஏற்கனவே விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை வைத்திருக்கும் நிலையில், புதிதாக லாஜிஸ்டிக் பிரிவில் வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது மூலம் சவுதி ஏர் டிரான்சிட் டிராபிக் பிரிவில் உலகளவில் 5வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது பின் சல்மான்

முகமது பின் சல்மான்

மேலும் சவுதி அரோபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இத்திட்டம் எப்படி, எப்போது செயல்பட துவங்கும் என்பதை விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

2030 இலக்கு

2030 இலக்கு

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 2030ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இல்லாத வர்த்தகத்தின் மூலம் குறைந்தது 12 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

துறைமுகம், ரயில், சாலை

துறைமுகம், ரயில், சாலை

சவுதி அரேபியாவை குளோபல் லாஜிஸ்டிக்ஸ் ஹப்-ஆக மாற்றப்படுவது மூலம் விமான நிறுவனம் மட்டும் அல்லாமல் துறைமுகம், ரயில், சாலை என அனைத்து கட்டமைப்புகளிலும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார் முகமதி பின் சல்மான்.

சவுதி அரேபியா ஜிடிபி

சவுதி அரேபியா ஜிடிபி

மேலும் சவுதி அரேபியாவின் ஜிடிபியில் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மூலம் தற்போது 6 சதவீத பங்குவிகிக்கும் நிலையில், இத்திட்டம் நிறைவேறும் போது சுமார் 10 சதவீதம் வரையில் இது உயரும் என அந்நாட்டின் அரசு செய்தி தளம் தெரிவித்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Prince MBS plans new national airline to form global logistics hub away from oil

Saudi Prince MBS plans new national airline to form global logistics hub away from oil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X