எஸ்பிஐ வங்கி சேவைகள் முடக்கம்.. ATMகள் வழக்கம் போல் செயல்பாடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ வங்கியில் பல்வேறு பிரச்சனைகளினால் டிஜிட்டல் வங்கி சேவைகள் நேற்றிலிருந்து முடங்கியுள்ளதாக, அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிட்டு வரும் நிலையில், எஸ்பிஐ அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய, முக்கிய வங்கி சேவைகள் இடைப்பட்ட இணைப்பு சிக்கல்களால், அதன் சேவைகள் தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் எஸ்பிஐயின் ஏடிஎம் மற்றும் பிஓஎஸ் மெஷின்கள் மட்டும் இயங்கி வருவதாகவும், மற்ற அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பல வாடிக்கையாளர்களும் இது குறித்து பரவலாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பல வாடிக்கையாளர்கள் தங்களது இணைய வங்கி பிரச்சனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் சரிவில் வெள்ளி விலை.. இன்று வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..!சூப்பர் சரிவில் வெள்ளி விலை.. இன்று வாங்கலாமா.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..!

 பண பரிமாற்றம் பாதிப்பு

பண பரிமாற்றம் பாதிப்பு

குறிப்பாக ஒரு வாடிக்கையாளர் பரிமாற்றம் செய்யப்பட்ட, பணமானது அனுப்பபட்டவருக்கும் சேரவில்லை, அனுப்பியவருக்கும் திரும்ப கிடைக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியா முழுவதும் 22,100 வங்கி கிளைகளை, ஏடிஎம்களுடன் கொண்டுள்ளது.

 வாடிக்கையாளர் பயன்பாடு

வாடிக்கையாளர் பயன்பாடு

இந்த வங்கியின் இணைய சேவைகளை 76 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதே மொபைல் வங்கி சேவைகளை 17 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சேவை முடக்கத்தால், இவர்களின் பரிமாற்றமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

 யோனோ சேவையும் பாதிப்பு

யோனோ சேவையும் பாதிப்பு

அதோடு எஸ்பிஐ-யின் யோனோ செயலியும் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு வாடிக்கையாளர் டிவிட்டரில் பதிவிட்டதற்கு பதிலாக வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார். இதே மற்றொரு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையினையோ அல்லது யுபிஐ சேவையினையே பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 அடிக்கடி பிரச்சனை தான்

அடிக்கடி பிரச்சனை தான்

இதே மற்றொரு வாடிக்கையாளர் உங்கள் வங்கியில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. அதனிய வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம், முன்னரே தெரிவிக்க வேண்டும். அவசர நிலை என்றால் என்ன செய்வது இப்படி பலரும் தங்களது ஆதங்கத்தினை கொட்டி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI banking services hit across the country

State bank of India system impacted since yesterday, but ATM services continue to work fine
Story first published: Tuesday, October 13, 2020, 18:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X