ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ ஓரம்கட்டிய அரசு நிறுவனம்.. முகேஷ் அம்பானி சோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகள் ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனம் விளங்கும் எஸ்பிஐ
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா -வின் லாபம் 74 சதவீதம் உயர்ந்து ரூ.13, 265 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.7,627 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.77,689.09 கோடியாக இருந்த மொத்த வருவாய் மதிப்பாய்வு, இக்காலாண்டில் ரூ.88,734 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏர் ஏசியா இந்தியாவை கைப்பற்றியது ஏர் இந்தியா.. கனவு திட்டம் நினைவாகிறது..?!! ஏர் ஏசியா இந்தியாவை கைப்பற்றியது ஏர் இந்தியா.. கனவு திட்டம் நினைவாகிறது..?!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வின் நிகர வட்டி வருமானம் (NII) கடந்த ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ.31,184 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 13 சதவீதம் அதிகரித்து ரூ.35,183 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

செயல்படாத சொத்துக்கள்

செயல்படாத சொத்துக்கள்

இந்திய வங்கியின் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு 4.90 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் 30, 2023 வரையில் முடிந்த காலாண்டில் மொத்தச் செயல்படாத சொத்துக்களின் (NPAs) அளவு 3.52 சதவீதமாகக் குறைந்துள்ளதால், ஸ்டேட் பாங்க்-ன் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.

எஸ்பிஐ குரூப் மொத்த வருவாய்

எஸ்பிஐ குரூப் மொத்த வருவாய்

செப்டம்பர் காலாண்டில் எஸ்பிஐ குரூப் மொத்த வருவாய் ரூ.1,14,782 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,01,143.26 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ - ரிலையன்ஸ்

எஸ்பிஐ - ரிலையன்ஸ்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, 2023 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 14,752 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒருங்கிணைந்த நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது எஸ்பிஐ, இதன் வாயிலாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 13,656 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

windfall tax மூலம் பாதிப்பு

windfall tax மூலம் பாதிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல தசாப்தங்களாக அதிக லாபம் ஈட்டும் இந்திய நிறுவனமாக இருந்தது, இக்காலாண்டில் ரிலையன்ஸ் அதன் ஏரிபொருள் ஏற்றுமதியின் மீதான windfall tax மூலம் 4,039 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன் நிகர வருமானத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் 4,729 கோடி ரூபாயும், ரீடைல் வர்த்தகத்தில் இருந்து 4,404 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. எப்படிப் பார்த்தாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இக்காலாண்டில் கடந்த ஆண்டு அளவான 13,680 கோடி ரூபாயை விடவும் குறைவானது.

அரையாண்டு அளவு

அரையாண்டு அளவு

அரையாண்டு அடிப்படையில், எஸ்பிஐயின் 22,077 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடும் போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 31,611 கோடி ரூபாய் உடன் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது.

முகேஷ் அம்பானி முந்தினார்

முகேஷ் அம்பானி முந்தினார்

இதேபோல், அரையாண்டு வருமான அடிப்படையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த வருவாய் 2,53,497 கோடி ரூபாய் உடன் முன்னணியில் உள்ளது. இதே காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 1,14,782 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI beats Reliance Industries India's most profitable firm in Q2; SBI net profit jumps 74 percent

SBI beats Reliance Industries India's most profitable firm in Q2; SBI net profit jumps 74 percent but in half yearly Reliance leads both in profit and revenue. Windfall tax affects Mukesh Ambani Reliance Industries earnings most in q2
Story first published: Sunday, November 6, 2022, 19:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X