ஆர்காம் சொத்துகள் விற்பனை.. களத்தில் இறங்கும் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்செல் நிறுவனத்திற்கு அடுத்தாக மிகவும் மோசமான நிலையில் வர்த்தகத்தை மூடிய நிறுவனம் அனில் அம்பானி தலைமை வகித்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தான். தொடர்ந்து வர்த்தகச் சரிவு, வருவாய் சரிவு, திரும்பும் பக்கம் எல்லாம் கடன் என மொத்த நிறுவனமும் இயல்பான நிலையில் இயங்குவதற்கே கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு. இந்நிலையில் கடன் பிரச்சனையைத் தாங்க முடியாமல் வர்த்தகத்தை முடியது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் நிலுவையைத் தீர்க்கம் வண்ணம் இந்நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய எஸ்பிஐ வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது.

 லாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..! லாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..!

எஸ்பிஐ

எஸ்பிஐ

அனில் அம்பானி தலைமை வகித்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் நிலுவைக்குத் தீர்வு காண இந்நிறுவன சொத்துக்களை விற்பனை செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் சொத்து விற்பனை மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்குச் சுமார் 23,000 ரூபாய் அளவிலான கடன் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களுக்கு UV சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் சுமார் 14,700 கோடி ரூபாய்க்கு வாங்க விண்ணப்பம் கொடுத்துள்ளது. இந்தச் சொத்து விற்பனை அனைத்தும் ஏலத்தின் அடிப்படையில் நடக்கும் என்பதால் இதன் முடிவு உடனடியாகத் தெரியாது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதேபோல் அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி தலைமையிலான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் டவர் மற்றும் பைபர் சொத்துக்களைச் சுமார் 4,700 கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏல தொகை

ஏல தொகை

UV சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (தற்போதைய நிலவரப்படி) பங்குபெறும் இந்த ஏலத்தின் முடிவில் கிடைக்கும் தொகை அனைத்தும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கப்பட்ட சீன மற்றும் இந்திய நிறுவனங்களுக்குச் செல்லும் எனவும் தெரிகிறது.

மொத்த கடன்

மொத்த கடன்

பல்வேறு பிரச்சனைகளால் மூடப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சுமார் 49,000 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவை வைத்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சொத்தும் மற்றும் இதர காரணிகள் மூலம் 33,000 கோடி ரூபாய் அளவிலான கடனை தீர்க்க முடியும் எனக் கணிப்பு வெளியாகியுள்ளது.

தோல்வி

தோல்வி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூடுவதற்கு முன்பு இந்நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்யப் பல முறை அனில் அம்பானி முயற்சி செய்தார். சொல்லப்போனால் அண்ணன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உடன் விற்பனை செய்யவும் முயற்சி செய்தார். ஆனால் மொத்த நிறுவனத்தையும் வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, இதற்கு முக்கியக் காரணம் ஆர்காம் நிறுவனத்தின் கடன் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI board approves Rs 23,000-crore RCom insolvency resolution plan

The board of State Bank of India (SBI) is learnt to have approved resolution plan for Reliance CommunicationsNSE 0.00 %, through which lenders are expected to recover around Rs 23,000 crore. UV Asset Reconstruction Company is believed to have placed bid of around Rs 14,700 crore, while Reliance Jio has made an offer of Rs 4,700 crore for tower and fibre assets of Reliance Infratel.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X