3 மாத EMI கட்ட அவகாசம்.. எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா மற்ற வங்கிகள் அறிவிப்பு.. மற்ற விவரங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மார்ச் 1 முதல் மூன்று மாதத்திற்கான இஎம்ஐ தள்ளி வைக்க அனுமதித்தது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின் படி, பல வங்கிகள் இதனை அமல்படுத்தியுள்ளன.

இது குறித்து பல வங்கிகள் தொடர்ந்து அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன. அவற்றில் சில..

எஸ்பிஐ கால அவகாசம் நீட்டிப்பு

எஸ்பிஐ கால அவகாசம் நீட்டிப்பு

ஆக ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப எஸ்பிஐ இந்த 2 மாத இஎம்ஐக்கு கால அவகாசத்தினை நீட்டித்துள்ளது. இது மார்ச் 1, 2020 முதல் மே 31 வரையில் அமலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தற்போது அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பல பொதுதுறை வங்கிகள் அனுமதி

பல பொதுதுறை வங்கிகள் அனுமதி

எஸ்பிஐ வங்கியினை தொடர்ந்து தற்போது பல பொதுத்துறை வங்கிகளும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் & சிந்த் பேங்க், ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் அதனதன் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ அவகாசம் குறித்து தகவல் கொடுத்துள்ளன.

எஸ்பிஐயின் செயல்முறை

எஸ்பிஐயின் செயல்முறை

ஆனால் இவ்வாறு இஎம்ஐ அவகாசம் குறித்து ஒவ்வொரு விதமான செயல்முறையை பின்பற்றி வருகின்றன. இதில் நாட்டின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி opt-in வழியை தேர்தெடுத்துள்ளது. இதன் படி வாடிக்கையாளார்கள் தங்களது விருப்பத்தினை வங்கிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

ஐடிபிஐ வங்கியின் செயல்முறை

ஐடிபிஐ வங்கியின் செயல்முறை

இதே ஐடிபிஐ வங்கி 'opt-out' என்ற திட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளது. ஆக எந்த வாடிக்கையாளர்கள் இஎம்ஐ அவகாசம் வேண்டாம் என யார் நினைக்கிறார்களோ அவர்கள், ஏப்ரல் 3க்குள் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அதாவது இந்த சேவையில் விருப்பம் இல்லாதவர் [email protected] என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப தெரிவித்துள்ளது.

கனரா வங்கியின் செயல்முறை

கனரா வங்கியின் செயல்முறை

கனரா வங்கி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தள்ளி வைக்க 8422004008 என்ற எண்ணுக்கு NO என்று எஸ் எம் எஸ் அனுப்புமாறு கேட்டுள்ளது. அப்படி இல்லை எனில் [email protected]. என்ற மெயில் ஐடிக்கு விவரங்களை அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பாதிப்பு எதுவும் இருக்காது

பாதிப்பு எதுவும் இருக்காது

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, தற்காலிக தடை பெறுபவர்களின் கடன் மதிப்பில் (கிரெடிட் ஸ்கோரில்) எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு முறையை பின்பற்றுவதால், இந்த வசதியை பெற விரும்பாதவர்கள் அந்தந்த வங்கிகளுடன் தெளிவுக்காக இணைய வேண்டும். இதற்காக உங்கள் வங்கியின் இணையத்திலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI, BOB and others announce Emi moratorium. Pls check other details

Banks are following different processes with regard to availing the facility of EMI moratorium, SBI chosen Opt –In, IDBI chosen OPT – out, and other banks are chosen different processes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X