வட்டியை குறைத்தது எஸ்பிஐ.. வீட்டு கடன் வாங்கியவர்கள் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் இல்லாமல் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொடர்ந்து மோசமடைந்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இதனால் ரெப்போ விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 5.15 சதவீதமாகவே தொடரும் எனவும், சிஆர்ஆர் எனப்படும் cash reserve ratio அளவீட்டை ஜூலை 31 வரையில் நிறுத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

எஸ்பிஐ

எஸ்பிஐ

ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா cash reserve ratio அளவீட்டைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதைப் பயன்படுத்திக்கொள்ளக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

இதன் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் வீட்டுக் கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைய உள்ளது. இதேபோல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

பிப்ரவரி 7ஆம் தேதி காலை வெளியான அறிவிப்பின் படி MCLR விகிதத்தில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் 5 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வருட MCLR விகிதம் 7.90 சதவீதத்தில் இருந்து 7.85 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சுமார் 9 முறை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

ஹோம் லோன்

ஹோம் லோன்

தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நாணய கொள்கையின் மூலம் சந்தையில் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் குறையும் அதேபோல் வைப்பு நிதிகளுக்குமான வட்டியும் குறையும். இப்படியிருக்கையில் இதன் சாதக பாதகங்கள் அனைத்தும் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் தெரிய வரும் என எஸ்பிஐ வங்கி உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள நிலையில், சந்தையில் மற்ற பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வட்டியைக் குறைக்கும். இதன் மூலம் ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு அதன் மூலம் அதிகப்படியான லாபம் கிடைக்க உள்ளது. இதைத் தொடர்ந்து வாகன கடன், வர்த்தகக் கடன் வாங்கியவருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும்

வைப்பு நிதி

வைப்பு நிதி

கடனுக்கான வட்டி விகிதத்தை வெறும் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்த நிலையில், வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 10 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரையில் குறைத்துள்ளது. இது மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.

இப்புதிய வட்டி மாற்றங்கள் அனைத்தும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சிஆர்ஆர் விகிதம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI home loans get cheaper, ninth cut in lending rate this fiscal

A day after Reserve Bank of India's monetary policy announcement, SBI, India's biggest bank, has cut its lending rates, making home and auto loans cheaper. SBI has also cut its fixed deposit or FD rates. SBI today announced announced a reduction in its MCLR, or marginal cost of funds based lending rate, by 5 basis points across all tenors, with effect from 10th February.
Story first published: Friday, February 7, 2020, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X