எஸ்பிஐயின் நெஃப்ட் சேவை.. இதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு விரைவில் நனவாகும் விதமாக, ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

 

முன்னதாக பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, வருடத்தில் 365 நாட்களும் நெஃப்ட் சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்பிஐ டிசம்பர் 16 முதல் அமலுக்கு கொண்டு வந்தது.

 
எஸ்பிஐயின் நெஃப்ட் சேவை.. இதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்..!

அதிலும் நெஃப்ட் சேவை அனைத்து நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் முடிவு என இல்லாமல் நமக்கு ஏற்றாற்போல் விருப்பம் போல பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

நெஃப்ட் பரிமாற்றத்திற்கு எஸ்பிஐ எந்த கட்டணமும் வசூல் செய்யவில்லை. இந்த நெஃப்ட் சேவையில் குறைந்த பட்ச பண பரிவர்த்தனை வரம்பு என்று எதுவும் இல்லை. இதே சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் நெஃப்ட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

நெஃப்ட் வசதி தற்போது 24 மணி நேரமும் செய்து கொள்ள முடியும். இதை விடுமுறை நாட்களில் கூட செய்து கொள்ள முடியும். இதற்கு முன்பாக வங்கி விடுமுறை தினங்களில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பணம் பரிமாற்றம் செய்வது:

எஸ்பிஐ இணைய வங்கி சேவையை பயன்படுத்தும் லாகின் பக்கத்தினை கிளிக் செய்து பார்க்கும் போது, அங்கு இரண்டு ஆப்சன்கள் உள்ளன. ஒன்று வித்-இன் எஸ்பிஐ, இரண்டாவது அவுட்சைடு எஸ்பிஐ.

இதில் அவுட்சைடு எஸ்பிஐ ஆப்சனில் எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளுக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இதில் பெனிபிசியரி ஆப்சனில் எப்போதும் போல பெயர் மற்றும் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் என அனைத்து விவரங்களையும் கொடுத்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இதே பணத்தை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று பே நவ், செட்யூல்டு லேட்டர், ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்சர் என உள்ளன. இதில் தேவையானவற்றை கிளிக் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். இதில் சப்மிட் கொடுக்கும் முன் உங்களது விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்து பின் கன்பார்ம் செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi neft எஸ்பிஐ
English summary

SBI NEFT money transfer new rules and regulations

SBI offers 24 hours NEFT services for all customers, there is no minimum transaction limit and maximum limit is Rs.10 lakh for retail customers.
Story first published: Sunday, December 22, 2019, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X