இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது இன்று மட்டும் 3% மேல் அதிகரித்துள்ளது
இவ்வங்கி பங்கின் விலை கடந்த மூன்று வர்த்தக அமர்வில் மட்டும் 10% மேல் அதிகரித்துள்ளது.
அதெல்லாம் சரி இன்றைய பங்கு நிலவரம் என்ன? எவ்வளவு அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் இவ்வளவு அதிகரித்துள்ளதே என்ன காரணம். வாருங்கள் பார்க்கலாம்.

மூன்று நாட்களில் நல்ல ஏற்றம்
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் பங்கு விலையானது இன்று மட்டும் 3% மேல் அதிகரித்து 271.40 ரூபாயாக காணப்படுகிறது. இதே கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் 10% மேல் அதிகரித்து காணப்பட்டது. இது பொதுத்துறை வங்கி பங்குகளின் விலையானது நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில் ஸ்டேட் பேங்கின் பங்கு விலையானது ஏற்றம் கண்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் குறியீடு
குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு இன்று மதியத்திற்கு மேல் 2 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சில்லறை கடன் வளர்ச்சியில் நல்ல வளர்ச்சியினைக் காணலாம். பெரும்பாலான கடன்
வழங்குனர்கள் எதிர்பார்த்ததை விட, வலுவான வருவாயினை பதிவு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறது. ஏனெனில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட வேகமாக வளர ஆரம்பித்துள்ளது என்று இவ்வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி சிறப்பாக இருக்கும்
கடந்த அக்டோபரில் இவ்வங்கியின் தலைவராக பொறுப்பேற்ற காரா, தொற்று நோயின் தொடக்கத்தினை விட முடிவுகள் சிறப்பாக இருக்கும். அதனால் எங்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் எஸ்பிஐயின் மோசமாக கடன் விகிதம் 5.28 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 5.44 சதவீதமாக இருந்தது.

பங்கு இலக்கு விலை
இதற்கிடையில் எஸ்பிஐ பங்கின் இலக்கு விலையாக நிபுணர்கள் மத்தியில் 300 இலக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்பு இருந்ததை விட வங்கிகளின் மீதான அழுத்தம் சற்று குறைந்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் வங்கி பங்குகளின் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.