இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனங்களின் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்கை முடக்கியுள்ளது NSDL அமைப்பு.
இதன் எதிரொலியாகவே திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் 5 முதல் 20 சதவீதம் வரையில் சரிவடைந்தது.

இதற்கிடையில் டிவிட்டரில் அதானி குழுமத்திற்குத் தொடர்புடைய கணக்குகள் மீது தற்போது NSDL அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கையை Scam2021 என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வைரலாக்கி வருகிறார்கள்..!
ஹர்ஷத் மேத்தா இன்று இதைத் தான் நினைத்திருப்பார்..!

அதானி பங்குகளை வைத்திருப்போரின் தற்போதைய நிலை

எந்த ஊழல்-ம் 'India Against Corruption' ஊழல்-ஐ விடப் பெரிதல்ல

சோனி லைவ் வாடிக்கையாளர்களே தயாராகுங்கள்

ஆர்ட் #அதானிகுரூப்

எந்தப் பெயரும் குறிப்பிடாமல் வெளியான இந்த டிவீட் மூலம் தான் தற்போது அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்துள்ளது.

அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தனது FPI கணக்கில் வைத்துள்ளது.
இந்நிலையில் NSDL அமைப்பு அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் FPI கணக்கை மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி குறிப்பிட்டு உள்ள 3 நிறுவனங்களும் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியைச் சேர்ந்த ஒரே முகவரியில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் எக்னாமிக் டைம்ஸ் Prevention of Money Laundering Act (PMLA) கீழ் NSDL அமைப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளது. ஆனால் இது இரண்டுமே உறுதிப்படுத்தாத தகவல்கள்.
இதற்கிடையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குரூப் பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தில் 200 சதவீதம் முதல் 1000 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும் தடை செய்யப்பட்ட 3 நிறுவன கணக்குகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் ஆலோசனை செய்து வருகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications