அதானி குழும நிறுவனத்தில் கைவைத்த செபி.. பங்குச்சந்தையில் தடாலடி சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் மற்றும் பெரும் தொழிலதிபரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் சில நிறுவனங்கள் அரசின் விதிகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தத்தம் நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

 

தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8000 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன.. வாங்கலாமா..! தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8000 சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன.. வாங்கலாமா..!

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின் பல பிரச்சனைகள் இருப்பது தற்போது அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் காரணத்தால் அதானி குழும நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அரசின் விதிகளைச் சரி வர பின்பற்றாத காரணத்தால் செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தத்தம் நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளதாகத் திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அரசு தெரிவித்துள்ளது.

3 வெளிநாட்டுக் கணக்குகள்

3 வெளிநாட்டுக் கணக்குகள்

சமீபத்தில் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்த 3 வெளிநாட்டு முதலீட்டுக் கணக்குகளைப் பல்வேறு காரணங்களுக்காக NSDL அமைப்புத் தடை விதித்தது, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு நிதித்துறை மாநில அமைச்சர் பங்கஜ் சவுதிரி எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

செபி அமைப்பு
 

செபி அமைப்பு

செபி அமைப்புத் தற்போது இந்த வெளிநாட்டு முதலீட்டு உடன் தொடர்புடைய அதானி குழும நிறுவனங்கள் அனைத்து விதமான விதிமுறைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கிறதா என்று ஆய்வு செய்யத் துவங்கியுள்ளதாகவும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதானி குழுமம் வைத்துள்ள சொத்துக்களையும் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் பங்கஜ் சவுதிரி தெரிவித்துள்ளார்.

அமலாக்க துறை ஆய்வு

அமலாக்க துறை ஆய்வு

இதேபோல் பங்கஜ் சவுதிரி செபி மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதானி குழுமத்தின் எந்த நிறுவனத்தை எல்லாம் ஆய்வு செய்து வருகிறது என்பதைத் தெரிவிக்கவில்லை. இதேபோல் அமலாக்க துறை அதானி குழும நிறுவனங்களை ஆய்வு செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

NSDL நடவடிக்கை

NSDL நடவடிக்கை

NSDL நடவடிக்கைக்குப் பின்பு அதானி குழுத்தின் அனைத்து பங்குகளும் பெருமளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது. இதனால் அதானி குழும முதலீட்டாளர்கள் பெருமளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதானி குழும பங்குகளின் நிலை

அதானி குழும பங்குகளின் நிலை

இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் நிலை

அதானி எண்டர்பிரைசர்ஸ் - 1349.35 ரூபாய் - 2.28 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 931 ரூபாய் - 4.92 சதவீதம் சரிவு
அதானி பவர் லிமிடெட் - 97.05 ரூபாய் - 4.99 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 813.00 ரூபாய் - 4.91 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 663.65 ரூபாய் - 1.49 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 920.55 ரூபாய் - 5 சதவீதம் சரிவு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: adani group adani indi
English summary

SEBI, DRI probing Gautam Adani's Adani group of companies, says Pankaj Chaudhary, MoS Finance

SEBI, DRI probing Gautam Adani's Adani group of companies, says Pankaj Chaudhary, MoS Finance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X