டெல்லி: கடந்த ஒரே வாரத்தில் 7 சிறந்த நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.37 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதில் மிகப்பெரிய முக்கிய பங்கு வகித்தது ஐடி நிறுவனமான டிசிஎஸ் தான்.
இதே வழக்கமாக முன்னிலையில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த முறை, சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது.
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட வங்கிகளும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.
இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் சற்று இழப்பினையும் சந்தித்துள்ளன.
பிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. எஸ்பிஐ தான் பெஸ்ட் சாய்ஸ்.. வட்டி விகிதம் எவ்வளவு..!

ரிலையன்ஸ் மிகப்பெரிய இழப்பு
வழக்கமாக இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் தான் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த வாரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 34,296.37 கோடி ரூபாய் குறைந்து, 12,25,445.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

டிசிஎஸ்ஸின் சந்தை மூலதனம்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 72,102.07 கோடி ரூபாய் அதிகரித்து, 11,70,875.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 21,894.28 கோடி ரூபாய் அதிகரித்து, 5,58,772.73 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 15,076.62 கோடி ரூபாய் அதிகரித்து, 4,77,663.03 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பார்தி ஏர்டெல்லின் மூலதனம்
பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் 13,720.73 கோடி ரூபாய் அதிகரித்து, 2,94,736.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 10,054.48 கோடி ரூபாய் அதிகரித்து, 3,74,253.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 3,855.36 கோடி ரூபாய் அதிகரித்து, 7,88,613.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச்யுஎல் சந்தை மதிப்பானது 693.12 கோடி ரூபாய் அதிகரித்து, 5,61,626.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சந்தை மூலதனம் சரிவு
இதே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மூலதனம் 12,024.63 கோடி ரூபாய் குறைந்து, 3,06,156.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கோட்டக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம் 4,661.65 கோடி ரூபாய் குறைந்து, 3,90,253.33 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 913.53 புள்ளிகள் அல்லது 1.90% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.