நீங்கள் கோடிஸ்வரராக கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே! 1,000% வரை விலை ஏறிய பங்கு விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் முதலீடு என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது. அதிலும் பங்கு சந்தையில் முதலீடு என்றால் அதனை சொல்லவே தேவையில்லை.

சாதாரணமாகவே பங்கு சந்தை முதலீடு என்பது பாகற்காய் போல் பார்க்கப்படும் நிலையில், இந்த தொற்று நோய் காலத்தில் எப்படி இருக்கும். ஆனால் இதிலும் லாபம் பார்க்க முடியும் என்கிறது இந்த தரவுகள்.

ஆனாலும் அதனையும் மீறி இந்திய பங்கு சந்தையில் கணிசமான அளவு முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. அதோடு முதலீட்டாளர்கள் லாபத்தினையும் பெற்றுள்ளனர்.

பலமான லாபம் கொடுத்த பங்குகள்

பலமான லாபம் கொடுத்த பங்குகள்

ஜூன் காலாண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில், cash segment-ல் 14,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை செய்துள்ளனர். குறிப்பாக பிஎஸ்இ-யில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இதில் 106 பங்குகள் நல்ல வருவாயும் கொடுத்துள்ளன. மீதமுள்ள பங்குகள் 2020 முதல் தொடக்கத்தில் இருந்து, இன்று வரையில் 70% நஷ்டத்தினை கொடுத்துள்ளதாக ஏஸ்ஈக்விட்டி தரவுகள் கூறுகின்றன.

 முதலீட்டில் இருமடங்கு லாபம்

முதலீட்டில் இருமடங்கு லாபம்

எஃப்ஐஐக்கள் தங்களது முதலீடுகளை பெரும்பாலும் சிறிய & மிட்கேப் ஃபண்டுகளில் செய்துள்ளனர். குறிப்பாக 106 பங்குகள் நல்ல வருவாயினைக் கொடுத்துள்ளன. 17 பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்தினை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் கிரானுல்ஸ் இந்தியா, டிக்ஸான் டெக்னாலஜிஸ், அதானி கிரீன், லாரஸ் லேப்ஸ், ஆர்த்தி மருந்துகள் மற்றும் ஐஓஎல் கெமிக்கல்ஸ் பங்குகள் அடங்கும்.

லாபத்திற்கு என்ன காரணம்?

லாபத்திற்கு என்ன காரணம்?

இந்த நிறுவனங்களில் சிலவற்றிற்கான வணிக வாய்ப்புகளுக்கு இந்த தொற்று நோய் புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் காலத்தில், அரசாங்கம் சில கொள்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது.

பார்மா துறையில் முதலீடுகள் அதிகரிப்பு

பார்மா துறையில் முதலீடுகள் அதிகரிப்பு

கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட பங்குகள் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற பல கருப்பொருள்கள் சந்தையில் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் காண்கிறோம். தொற்று நோய் தொடங்கியதில் இருந்தே, பார்மா துறையிலான பங்குகளில் வாங்குவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பட்டியலில் உள்ள பங்குகள் பெரும்பாலும் வீழ்ச்சி கண்டுள்ளன.

எந்த மாதிரியான பங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

எந்த மாதிரியான பங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

மேலும் கொரோனாவால் குறைந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மற்றும் பொருளாதாரத்தில் மீட்டெடுப்பதன் மூலம் வளரக்கூடிய ஆற்றலைக் கொண்ட பங்குகள் மீது முதலீடுகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில் ஹோல்டிங் வைத்துள்ள பங்குகள் மற்றும் அதன் லாபத்தினையும் காண்போம்.

200 – 400% வரையில் லாபம்

200 – 400% வரையில் லாபம்

ஐஓஎல் கெமிக்கல்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் பங்கானது எஃப்ஐஐக்கள் மார்ச்20ல் 2.61% ஆக இருந்த ஹோல்டிங்ஸ், ஜூன் 20ல் 6.47% ஆக அதிகரித்துள்ளது. இது 357% லாபத்தினை அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ஆர்த்தி மருந்துகள் 277% லாபத்தினை கொடுத்துள்ளது. விகாஸ் மல்டிகார் பங்குகள் 272% லாபத்தினையும், GMM Pfaudler பங்குகள் 220% லாபமும், educomp solutions பங்குகள் 200% லாபத்தினையும் பதிவு செய்துள்ளது.

100 – 200% வரையில் லாபம் கொடுத்த பங்குகள்

100 – 200% வரையில் லாபம் கொடுத்த பங்குகள்

இதே laurus labs பங்குகள் 192% லாபத்தினையும், marksans pharma பங்குகள் 189% லாபத்தினையும், LT foods பங்குகள் 171% லாபத்தினையும், opto circuits (india) பங்குகள் 168% லாபத்தினையும், granules india பங்குகள் 156% லாபத்தினையும், tanla solutions பங்குகள் 136% லாபத்தினையும், solara active pharma science பங்குகள் 120% லாபத்தினையும் பதிவு செய்துள்ளன.

அதிக முதலீடு- கணிசமான லாபம்

அதிக முதலீடு- கணிசமான லாபம்

இதுவே adani green energy பங்குகள் 117% லாபத்தினையும், Dixon technologies பங்குகள் 111% லாபத்தினையும், navin fluorine int. பங்குகள் 108% லாபத்தினையும், இதே azurobindo pharma பங்குகள் 107% லாபத்தினையும் பதிவு செய்துள்ளன. வெளி நாட்டு முதலீட்டாளர்கள் பொதுவாக பணப்புழக்கத்தின் லார்ஜ் கேப் பங்குகளை நம்புகிறார்கள். எப்படி இருப்பினும் எதிர்கால வளர்ச்சிக் கண்னோட்டமும் மிக உயர்ந்ததாகவும் அளவிடக்கூடியதாகவும் இருந்தால் அத்தகைய தேர்தெடுக்கப்பட்ட மிட் கேப் பண்டுகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் காண முடிகிறது.

 கையிருப்பை குறைத்த FIIs -200% மேல் லாபம்

கையிருப்பை குறைத்த FIIs -200% மேல் லாபம்

கீழ்கண்ட பங்குகள் மார்ச்20 முதல் ஜூன் 20 வரையிலான காலத்தில், லாபத்தினை கண்டிருந்தாலும், தங்களது முதலீடுகளை குறைத்துள்ளனர்.


Alok industries பங்குகளில் 1.02%ல் இருந்து 0.23% ஆக குறைத்துள்ளனர், இது 1,101% லாபத்தினை கொடுத்துள்ளது.


Best agrolife பங்குகளில் 14.29%ல் இருந்து 6.82% ஆக குறைத்துள்ளனர், இது 224% லாபத்தினை கொடுத்துள்ளது.


இதே MCleod russel india பங்குகளில் 0.87%ல் இருந்து 0.64% ஆக குறைத்துள்ளனர், இது 214% லாபத்தினை கொடுத்துள்ளது.

கையிருப்பை குறைத்த FIIs - 200% கீழ் லாபம் பெற்ற பங்குகள்

கையிருப்பை குறைத்த FIIs - 200% கீழ் லாபம் பெற்ற பங்குகள்

Reliance communication பங்குகளில் 3.11%ல் இருந்து 0.18% ஆக குறைத்துள்ளனர், இது 190% லாபத்தினை கொடுத்துள்ளது.

Hexa tradex பங்குகளில் 20.98%ல் இருந்து 20.97% குறைத்துள்ளனர், இது 172% லாபத்தினை கொடுத்துள்ளது.

Eveready industries (india) பங்குகள் 171% லாபத்தினையும், Alkyl amines chemicals பங்குகள் 148% லாபத்தினையும், JMT auto பங்குகள் 144% லாபத்தினையும், Sintex plastics technology பங்குகள் 140% லாபத்தினையும், Vaibhav global பங்குகள் 132% லாபத்தினையும், Shilpa medicare பங்குகள் 131% லாபத்தினையும், Suzlon energy பங்குகள் 128% லாபத்தினையும், Dishman carbogan amcis பங்குகள் 127% லாபத்தினையும் கொடுத்துள்ளன. எனினும் இவற்றில் தங்களது முதலீடுகளை குறைத்துள்ளன FIIs.

கணிசமான லாபம் பார்த்த பங்குகள்

கணிசமான லாபம் பார்த்த பங்குகள்

இதுவே Bombay rayon fashions பங்குகள் 119% லாபத்தினையும், Astec lifesciences ltd பங்குகள் 116% லாபத்தினையும், Jaiprakash associates பங்குகள் 114% லாபத்தினையும், Birla soft பங்குகள் 107% லாபத்தினையும், Tata communications பங்குகள் 106% லாபத்தினையும் பதிவு செய்துள்ளன. எஃப் ஐ ஐக்களின் இந்த பங்கு குறைப்பானது எதிர்மறையான அறிகுறியாகக் கூட பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது மணிகன்ட்ரோல் செய்தியினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்


அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், 01 ஜனவரி 2020 அன்று 3.10 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. 21 ஜனவரி 2020 வரை வழக்கம் போல வர்த்தகமானது. ஆனால் அதன் பின் அப்பர் சர்க்யூட் அடிக்கத் தொடங்கின. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து நிறைய அப்பர் சர்க்யூட் மற்றும் லோயர் சர்க்யூட்டாக அலோக் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகமானது. இந்த ஆகஸ்ட் 06-ம் தேதியில் இருந்து தான், சர்க்யூட் அடிக்காமல், சாதாரணமாக வர்த்தகமாகி வருகின்றன. இன்று 34.15 ரூபாய்க்கு அலோக் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.

ஆக அலோக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1,000% அதிகரித்து இருக்கிறது. சுமாராக 10 லட்சம் ரூபாயை இந்த பங்குகளில், கடந்த ஜனவரி 01, 2020-ல் முதலீடு செய்து, இன்று வர்த்தக நேரத்தில் 34.15 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட சுமார் 1 கோடி ரூபாயை லாபமாகப் பார்த்து இருக்கலாம்.

 

 சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்யுங்கள்

சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்யுங்கள்

எனினும் அவ்வப்போது சந்தை மாற்றத்திற்கு ஏற்ப குறைத்தும் வாங்கியும் வருகின்றனர். இந்த பங்குகள் தான் ஏற்றம் கண்டு லாபம் பார்த்தாயிற்றே இனி எதற்கு என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால் நிச்சயம் நமக்கு இது பயனுள்ளதாகவே இருக்கும். சிலர் இந்த பங்குகளை ஏற்கனவே வாங்கியிருக்கலாம். சிலர் விற்பனை செய்திருக்கலாம்.

முதலீடு செய்யலாமா?

முதலீடு செய்யலாமா?

பொதுவாக பங்குகளைத் துணிகரமான முதலீடுகள் என்று கூறுவார்கள். இவ்வகை முதலீடுகளில் லாபம் வர எவ்வளவு வாய்ப்பு உள்ளதோ? அதே அளவு ரிஸ்கும் உள்ளது. ஆக முதலீட்டினை செய்யும் போது, அதுவும் இந்த மாதிரியான நெருக்கடியான நேரத்தில், முதலீடு செய்வது என்பது கொஞ்சம் ரிஸ்கியான விஷயமாக பார்க்கப்பட்டாலும், நிறுவனத்தின் செயல்பாட்டை நீண்டகால அளவில் கணக்கிட்டு, ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து முதலீடு செய்வது மிக நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Several shares gained up to 1,000 percent YTD Alok industries gave a chance to become a crorepati

Market update.. Should you buy this stock? It will gain 100 – 400% return YTD, we will listed these stocks in in this story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X