அடுத்தடுத்துப் பணிநீக்கம்.. திங்கட்கிழமை சோகமான நாளாக மாறியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அளவுகள் சக வளரும் நாடுகளைக் காட்டிலும், சில முக்கிய வல்லரசு நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவே இருப்பதால் இந்தியாவில் பணிநீக்கம் அதிகமாக இருக்காது எனக் கூறப்பட்டது.

 

ஆனால் தற்போது நிலைமை சற்று மாறியதாகத் தெரிகிறது, இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அறிவித்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி கன்ஸ்யூமர் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்துள்ளதால் ஒட்டுமொத்த டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் டெக் சந்தையில் பணிநீக்கம் 2022 ஆம் ஆண்டு உடன் முடியும் என நினைத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பணிநீக்க அறிவிப்புகள் புத்தாண்டு துவங்கி முதல் 15 நாட்களுக்குள்ளேயே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று 3 நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

டன்சோ நிறுவனம்

டன்சோ நிறுவனம்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் டன்சோ நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டன்சோ மளிகை பொருட்கள் மற்றும் இதர முக்கிய வர்த்தகத்தில் அதிகப்படியான செலவுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ShareChat பணிநீக்கம்
 

ShareChat பணிநீக்கம்

ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டிசம்பர் மாத பணிநீக்கத்தைத் தொடர்ந்து தற்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 - 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Rebel Foods பணிநீக்கம்

Rebel Foods பணிநீக்கம்

பெரு நகரங்களில் அசத்தி வரும் கான்சப்ட் ஆக விளங்கும் கிளவுட் கிட்சன் பிரிவு நிறுவனமான Rebel Foods பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் Behrouz Biryani, Oven Story, போன்ற பல பிராண்டுகளை வைத்து இந்தியாவின் பல பெரு நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் Rebel Foods நிறுவனமும் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Skit.ai பணிநீக்கம்

Skit.ai பணிநீக்கம்

கடந்த வாரம் SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமான Skit.ai சுமார் 115 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கத்தில் பிஸ்னஸ் அனலிஸ்ட், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ப்ராடெக்ட் ஆப்ரேஷன்ஸ், சிஎஸ்எம் அணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. Skit.ai நிறுவனம் இப்போது அமெரிக்கப் பிராந்தியத்தில் அதிகக் கவனம் செலுத்துவதால், பணிநீக்கங்கள் இந்திய அணியைப் பாதித்தன.

EDTECH நிறுவனங்கள்

EDTECH நிறுவனங்கள்

கடந்த ஆண்டு EDTECH நிறுவனங்கள் தான் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் கன்ஸ்யூமர் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்கம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவரையில் ஓலா, cashfree, Moglix ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

சிறிய ஸ்டார்ட்அப்

சிறிய ஸ்டார்ட்அப்

இதேபோல் புதிய வர்த்தகம், வாடிக்கையாளர்கள், வருமானம், லாபத்தை ஈட்ட முடியாத அனைத்து சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது புதிய முதலீட்டை ஈர்க்க முடியாமல் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறது. இதனால் இந்தச் சிறிய மற்றும் நிதி ஆதாரம் அதிகமாக இல்லாத அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது பணிநீக்கம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ShareChat, Dunzo, Rebel Foods announced layoff; consumer internet startups employees in deep trouble

ShareChat, Dunzo, Rebel Foods announced layoff; consumer internet startups employees in deep trouble
Story first published: Monday, January 16, 2023, 18:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X