ShareChat: பொங்கல் முடிந்த கையோடு 500 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் Linkedin பதிவில் கதறல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூக வலைதளப் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் பிரச்சனை நிறைந்த காலகட்டத்தில் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட சில ஊழியர்கள் லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளனர். அதிலும் சிலரின் பதிவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech தனது ஊழியர்களை எப்படிப் பணிநீக்கம் செய்தது தெரியுமா..?

ரெசிஷன் தாக்கம் தீவிரம்.. சேர்சாட் நிறுவனத்தில் 5% ஊழியர்கள் பணிநீக்கம்..! ரெசிஷன் தாக்கம் தீவிரம்.. சேர்சாட் நிறுவனத்தில் 5% ஊழியர்கள் பணிநீக்கம்..!

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

சேர்சாட் தளத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு ஊழியர், பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு இன்று காலை தனது லேப்டாப்-ல் அலுவலக ஈமெயில் ஐடியை திறக்க முயன்று உள்ளார், லாக்இன் செய்ய முடியவில்லை. முதலில் அந்த ஊழியர்கள் பாஸ்வோர்டு எக்ஸ்பியரி ஆகியிருக்கும் என நினைத்துள்ளார்.

லாக்இன்

லாக்இன்


ஆனால் தொடர்ந்து 2, 3 முறை முயற்சி செய்தும் லாக்இன் செய்ய முடியாத நிலையில், அவருடைய அக்கவுண்ட் டிஸ்ஏபிள் ஆகியுள்ளது என்றும் administrator-ஐ அனுகும்படி தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தச் சேர்சாட் ஊழியர்கள் தனது சக ஊழியரிடம் கேட்டு உள்ளார், அதில் ஒருவர் நாம் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளோம் என அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளார்.

பர்சனல் ஈமெயில்
 

பர்சனல் ஈமெயில்

அதன் பின்பு தான் சேர்சாட் நிர்வாகம் அந்த ஊழியரின் பர்சனல் ஈமெயில்-க்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தி சேர்சாட் நிறுவனத்திடம் வந்துள்ளது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், தான் எப்போதும் இந்தப் பணிநீக்கம் செய்யப்படும் அணியில் இருக்கமாட்டார் என நினைத்துக்கொண்டு இருந்த நிலையில், இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகப் பதிவிட்டு உள்ளார்.

 MohallaTech சிஇஓ

MohallaTech சிஇஓ

ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா இன்று வெளியிட்டுள்ள தகவல் படி இந்தப் பணிநீக்க சுற்றில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

600 ஊழியர்கள் பணிநீக்கம்

600 ஊழியர்கள் பணிநீக்கம்

இந்தப் பணிநீக்கத்தின் மூலம் 500 முதல் 600 ஊழியர்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பணிநீக்கத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் சம்பளம் வாங்குவோரை அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஈமெயில், ஸ்லாக் கட்

ஈமெயில், ஸ்லாக் கட்

MohallaTech நிர்வாகம் தனது ShareChat மற்றும் Moj ஆகிய தளத்தில் இருக்கும் 500க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், அவர்களுக்குப் பணிநீக்கம் அறிவிப்பை அறிவிக்கும் முன்னரே ஈமெயில், ஸ்லாக் போன்ற அனைத்து கம்யூனிகேஷன் ஆக்சஸ்-ஐ நீக்கவிட்டதாகத் தெரிகிறது.

சம்பளம்

சம்பளம்

MohallaTech நிர்வாகம் 500க்கும் அதிகமான ஊழியர்களைத் தடாலடியாகப் பணிநீக்கம் செய்ப்பட்ட நிலையில், இதில் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களது நோட்டீஸ் பீரியட் காலத்திற்கான சம்பளம் மற்றும் MohallaTech கிளை நிறுவனங்களில் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் தலா 15 நாள் சம்பளத்தைக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

bonus தொகை

bonus தொகை

இதேபோல் performance bonus தொகை டிசம்பர் 31 வரையில் 100 சதவீதம் pro-rated அடிப்படையில் கொடுக்கப்பட உள்ளது. இதோடு நிலுவையில் உள்ள விடுமுறை நாட்களுக்கும் சம்பளத்தை அளிக்கப்படுகிறது. அனைத்து ஊழியர்களுக்கு ஜூன் 30 வரையில் நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் நடைமுறையில் இருக்கும் என்னும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

லேப்டாப், ஸ்மார்ட்போன், ESOP

லேப்டாப், ஸ்மார்ட்போன், ESOP

இதேவேளையில் MohallaTech நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றைத் தங்களே வைத்துக்கொள்ளலாம் எனச் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா அனுப்பிய மின்னஞ்சலில் இருப்பதாகத் தகவல் வெளியானது, ஆனால் இதை நிர்வாகம் உறுதி செய்யவில்லை, மேலும் ஏப்ரல் 30, 2023 வரையில் அளிக்கப்பட்ட ESOP-ஐ ஊழியர்களை வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் அமேசான் ஆட்டம் ஆரம்பம்.. 5 மாதம் சம்பளத்துடன் பணிநீக்கம்..!இந்தியாவில் அமேசான் ஆட்டம் ஆரம்பம்.. 5 மாதம் சம்பளத்துடன் பணிநீக்கம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sharechat layoff 500 employees after pongal holiday; Employees shocked with Linkedin post

Sharechat layoff 500 employees after pongal holiday; Employees shocked with Linkedin post
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X