ShareChat-ல் 101 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி சோஷியல் மீடியா நிறுவனமாகத் திகழும் ஷேர்சாட் ஏற்கனவே சீன நிறுவன வருகையால் கடுமையான வரத்தகப் போட்டியைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் 25 சதவீத ஊழியர்கள் இன்று காலையில் பணிநீக்கம் செய்துள்ளனர்.

பேஸ்புக்-கிற்கு இணையாக 10க்கும் அதிகமான இந்திய மொழிகளில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ஷேர்சாட் கொரோனா பாதிக்கப்பால் ஏற்பட்ட விளம்பர வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்பின் காரணமாக அதிகளவிலான வருவாய் இழந்துள்ளது.

இதன் எதிரொலியாக ஸ்விக்கி, சோமோட்டோ, cult fit, Oyo நிறுவனங்கள் செய்ததைப் போலவே ஷேர்சாட் நிறுவனமும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் எடுத்த அதிரடி முடிவு.. இனி பவுடர் விற்பனை இல்லை.. எங்கெல்லாம் தெரியுமா?ஜான்சன் & ஜான்சன் எடுத்த அதிரடி முடிவு.. இனி பவுடர் விற்பனை இல்லை.. எங்கெல்லாம் தெரியுமா?

ஷேர்சாட்

ஷேர்சாட்

டிவிட்டரின் 100 மில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் ஷேர்சாட் இன்று காலையில் தனது ஊழியர்களுக்கு, பணிநீக்கம் குறித்து முக்கியமான ஈமெயில் அனுப்பியுள்ளது.

இந்நிறுவனம் துவங்கப்பட்டு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், பல மடங்கு வளர்ச்சி அடைந்து அமெரிக்கச் சமுக வலைதள நிறுவனமான டிவிட்டரின் முதலீட்டைப் பெற்றது.

ஆனால் இந்நிறுவனத்தில் ஏற்கனவே பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகள் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷேர்சாட் தளத்தின் மூலம் விளம்பர வருவாய் பெறத் துவங்கியது. ஆனால் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதிப்புகள், இந்நிறுவனத்தின் விளம்பர வர்த்தகம் மற்றும் வருவாயைக் கடுமையாகப் பாதித்தது.

தற்போது நாட்டின் ஒட்டுமொத்த விளம்பரத் துறையும் (Online & Digital) மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்குஷ் சச்தேவா

அன்குஷ் சச்தேவா

இன்று ஷேர்சாட் ஊழியர்களுக்கு, இந்நிறுவன சிஇஓ அன்குஷ் சச்தேவா அனுப்பிய ஈமெயிலில், "நம்முடைய கவனம் அனைத்தும் core product மற்றும் feed பரிந்துரையில் இருக்க வேண்டும், அதன் மூலமாகவே சந்தையில் போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வளர வேண்டும்" மேலும் "இந்த ஆண்டு விளம்பரத் துறையின் வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவுகளைக் கணிக்க முடியாத அளவிற்கு இருப்பதால், ஷேர்சாட் வருவாய் ஈட்டும் பிரிவுகளைச் சீரமைப்புச் செய்ய உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

101 ஊழியர்கள்

101 ஊழியர்கள்

ஷேர்சாட் நிறுவனத்தில் 400க்கும் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், தற்போது 25 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஷேர்சாட் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்து இன்று மாலையில் தான் தெரியும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

 

சம்பளம்

சம்பளம்

தற்போது வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு 2 மாத garden leave அல்லது 50 சதவீத சம்பளத்தில் 4 மாத வேலை கொடுக்கப்படும் என ஷேர்சாட் தெரிவித்துள்ளது.

garden leave என்பது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள் நிறுவனத்தில் எவ்விதமான வேலை அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் பணியில் இருப்பார்கள்.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

பெங்களூரை மையமாகக் கொண்டு வர்த்தகம் செய்யும் ஷேர்சாட் நிறுவனத்தில் டிவிட்டர், டிரஸ்ட்பிரிட்ஜ் பார்ட்னர்ஸ், சன்வேய் கேப்பிடல், லைட்ஸ்பீட் வென்சர் பார்னர்ஸ் மற்றும் SAIF கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ShareChat lays off 101 employees as advertising market tanks

ShareChat laid off 101 employees on Wednesday, or about a fourth of the workforce, as the regional social media firm expects the advertising market to be unpredictable this year. The Twitter-backed firm sent an email to employees on early morning Wednesday informing them about the various cost-cutting measures.
Story first published: Wednesday, May 20, 2020, 14:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X