அமெரிக்காவிற்குப் பறந்த சேர்சாட்.. டிக்டாக் உடன் போட்டியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி சமூகவலைதள நிறுவனமான சேர்சாட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்தாலும், டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவிற்கு வர முயற்சி செய்து வரும் நிலையில், போட்டியைச் சமாளிக்கத் தொழில்நுட்ப பிரிவில் தன்னை வலிமையாக நிலைநிறுத்த வேண்டும் என முடிவு செய்த சேர்சாட் அமெரிக்காவில் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.

அமெரிக்காவில் பல முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் இருக்கும் முக்கிய வர்த்தகப் பகுதியான சிலிக்கான் வேலி பகுதியில் சேர்சாட் லேப்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைச் சேர்சாட் உருவாக்கியுள்ளது.

பாலோ ஆல்டோ பகுதியில் அமைந்திருக்கும் இப்புதிய சேர்சாட் லேப்ஸ் அலுவலகத்தில் தனது சமூக வலைத் தளமான சேர்சாட்-க்கு மிகவும் தேவையான முக்கியத் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார்.

சேர்சாட் லேப்ஸ்

சேர்சாட் லேப்ஸ்

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சேர்சாட் லேப்ஸ் முற்றிலும் தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அலுவலகத்தின் மூலம் சேர்சாட் தளத்திற்குத் தேவையான மிகவும் திறன் வாய்ந்த content creation தளமும், விநியோக இன்ஜின்-ம் உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

புதிய தலைவர்

புதிய தலைவர்

இப்புதிய திட்டத்திற்குத் தலைமை வகிக்க உபர் நிறுவனத்தின் முன்னாள் பிராடெக்ட் தலைவரான கவ்ரவ் மிஷ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். உபர் நிறுவனத்தில் கவ்ரவ் மிஷ்ரா செயற்கை நுண்ணறிவு, டேட்டா மற்றும் மார்கெட் பிளேஸ் தளத்தில் பணியாற்றியுள்ளார்.

மேலும் அவர் Guruji.com என்னும் பிராந்திய மொழிக்கான சர்ச் இன்ஜினை உருவாக்கி பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

 

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

சேர்சாட் லேப்ஸ்-ல் சமுக வலைதளம் மற்றும் வீடியோ செயலியான மோஜ் ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் புதிதாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் தளத்தை முதற்கட்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

இந்நிலையில் பைட்டான்ஸ்-ன் டிக்டாக் மற்றும் ஹலோ ஆகிய செயலிகள் மூலம் இந்தியாவில் பல கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று இந்நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக மாற்றியுள்ளது. இதனால் இந்தியச் சந்தையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என முடிவு செய்துள்ள டிக்டாக் மீண்டும் இந்தியாவிற்கும் வரும் பணிகளைச் செய்து வருகிறது.

டிக்டாக்

டிக்டாக்

அமெரிக்காவில் சாதகமான சூழ்நிலை உருவாக்கியுள்ள நிலையில் டிக்டாக் இந்தியாவிற்குத் திரும்ப வர வேண்டும் என்ற திட்டத்துடன் சட்டம், கொள்கை மற்றும் சட்ட ஆலோசனை, தகவல்தொடர்புகள் பணிகளுக்காகப் பல முக்கியக் கூட்டணிகளைத் தேர்வு செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

வர்த்தகப் போட்டி

வர்த்தகப் போட்டி

டிக்டாக் இந்தியாவிற்கு மீண்டும் இந்தியாவிற்கு வர முயற்சிகளைத் துவங்கி பின்பு சேர்சாட் தனது டெக் தளத்தை வலிமைப்படுத்த அமெரிக்காவில் அலுவலகத்தைத் துவங்கும் முடிவை எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: silicon valley sharechat
English summary

Sharechat opens new R&D lab in Palo alto

Sharechat opens new R&D lab in Palo alto
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X