அதானி குழுமத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை.. சரசரவென 2வது நாளாக சரிந்த பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான அதானி குழுமம், துறைமுகம், விமானம், எரிபொருள், சிமெண்ட், அடிப்படை உலோகங்கள் முதல் பல துறைகளில் வெற்றிகரமாக வணிகத்தினை செய்து வருகின்றது.

தற்போது மீடியா துறையிலும் என் டி டிவியின் பங்குகளை வாங்கியதன் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர் ஆன கெளதம் அதானி, தொடர்ந்து பல்வேறு வணிகங்களிலும் முதலீடு செய்து வருகின்றார். புதிய புதிய துறைகளில் இறங்கி வருகின்றார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை இழந்த மக்கள்..! ஓலா நிலைமை என்ன..? எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை இழந்த மக்கள்..! ஓலா நிலைமை என்ன..?

அதானியின் அசுர வளர்ச்சி

அதானியின் அசுர வளர்ச்சி

1980-களில் சரக்கு வணிகத்தில் ஆரம்பித்த வணிக குழுமம் இன்று பெரும்பாலான துறைகளில் காலடி பதித்துள்ளது. இதனை மேம்போக்காக பார்த்தால் அதானி குழுமத்தின் வளர்ச்சி என்று தான் கூற வேண்டும். எனினும் அதானி குழுமத்தின் மறுபுறத்தினையும் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வரும் அதானி, தொடர்ந்து இனியும் முதலீடு செய்வதாக அறிவித்து வருகின்றார். இதற்கு தேவையான நிதி? என்பது தான் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

கிரெடிட்சைஸ் எச்சரிக்கை

கிரெடிட்சைஸ் எச்சரிக்கை

பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அது அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் கடன் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் அதானி குழும நிறுவனங்கள் எதிர்காலத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளது.

கடந்த அமர்வில் பலத்த சரிவு

கடந்த அமர்வில் பலத்த சரிவு

அதானி குழுமம் குறித்தான இந்த எச்சரிக்கைக்கு பிறகு, கடந்த அமர்விலேயே அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டன. குறிப்பாக அதானி பவர் 5% சரிவினையும், அதனி வில்மர் 2.51% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டத்தட்ட 7% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கும் 4% இழப்பினையும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 2% சரிவிலும், அதானி டோட்டல் கேஸ் 1.5% சரிவிலும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3% சரிவினைக் கண்டும் இருந்தன.

இன்று என்ன நிலவரம்

இன்று என்ன நிலவரம்

இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் சில இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

அதானி பவர் 4.99% சரிவினையும், அதனி வில்மர் 2.37% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டத்தட்ட 2.60% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 0.59% ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 0.42% குறைந்தும், அதானி டோட்டல் கேஸ் 0.26% குறைந்தும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3.18% அதிகரித்தும் காணப்படுகின்றது.

விரிவாக்க திட்டங்கள்?

விரிவாக்க திட்டங்கள்?

கடந்த சில ஆண்டுகளாகவே அதானி குழுமம் தீவிர விரிவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனால் கடன் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மிகப்பெரிய மூலதனங்களை கொண்டு புதிய புதிய அல்லது தொடர்பில்லாத வணிகங்களில் இறங்கி வருகின்றது. இது மேற்கொண்டு அதானிக்கு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shares fall for 2nd day on worries over Adani Group's future

Shares fall for 2nd day on worries over Adani Group's future/அதானி குழுமத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை.. சரசரவென 2வது நாளாக சரிந்த பங்குகள்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X