36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம்: ஸ்பைஸ்ஜெட் வழங்கும் வசதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் இருந்துகொண்டே இணையத்தின் உதவியால் ஆன்லைன் மூலம் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது அடுத்த கட்டமாக விமானத்தில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கூட ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானத்தில் பறந்து கொண்டே ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை இந்தியாவில் தரும் முதல் விமான நிறுவனமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாசா ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸ் என்ட்ரி.. விமான நிறுவனங்களுக்கு சரியான போட்டி! ஆகாசா ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸ் என்ட்ரி.. விமான நிறுவனங்களுக்கு சரியான போட்டி!

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இந்தியாவில் இயங்கிவரும் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், 'ஸ்கைமால்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது கூட ஆன்லைனில் மிக எளிதாக ஷாப்பிங் செய்யலாம்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்படி விமானங்களில் பயணம் செய்துகொண்டே ஸ்னாப்டீல் நிறுவனம் விற்பனை செய்யும் ஆடைகள், நகைகள், அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்கு ஒரு சில சிறப்பு சலுகைகளும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்டர்

ஆர்டர்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கும் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும், பயணிகள் தங்களுக்கு தேவையான ஆடை, அழகு சாதன பொருட்கள், ஹெட்போன்கள், செல்போன்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பயணம் செய்து கொண்டே ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆர்டர் செய்த பொருட்கள் விமானம் தரையிறங்கும் போது அவர்களுடைய ஆர்டர் உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டோர் டெலிவரி

டோர் டெலிவரி

மேலும் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் இந்தத் திட்டத்தால் பயணிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் என்றும் ஸ்னாப்டீல் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

புது அனுபவம்

புது அனுபவம்

இந்த திட்டம் குறித்து ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை வணிக அதிகாரி டெபோஜோ மகரிஷி அவர்கள் கூறும் போது, 'விமானத்தில் மிக உயரத்தில் பறந்து கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை பயணிகள் மகிழ்ச்சியுடன் உபயோகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது அனுபவங்களை கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றும் கூறினார்.

ஸ்பைஸ் ஸ்க்ரீன்

ஸ்பைஸ் ஸ்க்ரீன்

ஸ்னாப்டீல் எங்கள் விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு தளமான ஸ்பைஸ் ஸ்க்ரீன் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், எங்கள் பயணிகளின் பயண அனுபவங்கள் புதுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் சலுகைகள் மூலம் எங்கள் பயணிகளை தொடர்ந்து மகிழ்விப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியான சேவை

மகிழ்ச்சியான சேவை

இதுகுறித்து ஸ்னாப்டீல் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை தலைவர் ரவிமலானிஅவர்கள் கூறியபோது, 'ஸ்னாப்டீல் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஸ்னாப்டீல் இரண்டும் இந்தியாவின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தரையில் இருந்து மட்டுமின்றி உயரத்தில் பறக்கும் போது கூட ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருள்களை பொதுமக்கள் ஆர்டர் செய்யலாம் என்பது ஒரு புதுவிதமான முயற்சி ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

மேலும் 36,000 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது பயணிகளுக்கு தேவையான இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பதற்காக விமானத்தில் சிறப்பு தொழில்நுட்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shopping now possible at 36000 feet in air with SpiceJet's launch of 'Sky Mall'!

Shopping now possible at 36000 feet in air with SpiceJet's launch of 'Sky Mall'! | 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம்: ஸ்பைஸ்ஜெட் வழங்கும் வசதி!
Story first published: Friday, June 17, 2022, 8:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X