#InstaForKids பேஸ்புக்-ன் பலே திட்டம்.. கார்ப்பரேட் போட்டியால் குழந்தைகளுக்கு பாதிப்பா?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சமுகவலைதளத்தில் கொரோனா தொற்று-ஐ தாண்டி அதிகம் விவாதிக்கப்படும் மிக முக்கியமான விஷயம் பேஸ்புக்-ன் Instagram For Kids திட்டம் குறித்துத் தான்.

இன்று நம்முடைய வாழ்க்கை முறை சமுக வலைத்தளம் இல்லாமல் இயங்க முடியாது என்ற சூழ்நிலையைத் தாண்டி இதற்கு அடிமையாகி இருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 2 வயது குழந்தைகள்

2 வயது குழந்தைகள்

இன்றைய குழந்தைகள் 2 வயதில் இருந்து ஸ்மார்ட்போன், கம்பியூட்டர் போன்ற கருவிகளை எளிதாகப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. ஒருபக்கம் இது வியக்கவைக்கும் விஷயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெற்றோர்களைப் பயமுறுத்துகிறது என்றால் மிகையில்லை.

 சமுகவலைதளம், இணையம்

சமுகவலைதளம், இணையம்

காரணம் சமுகவலைதளத்திலும், இணையத்திலும் குழந்தைகளுக்கு ஆபத்தான பல விஷயங்கள் இருக்கும் வேளையில் இதைச் செக்யூரிட்டி ஆப், பேரென்டல் கைடென்ஸ் எனப் பல பாதுகாப்புகள் உடன் பெற்றோர்கள் கண்காணித்து வந்தாலும், இதற்கு அடிமையாகும் வழக்கம் குழந்தைகளிடம் உருவாகியுள்ளது. இது குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறி வருகிறது.

 குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் செயலி

குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் செயலி

இந்தச் சூழ்நிலையில் சமுகவலைதளத்திலும், இணையத்திலும் குழந்தைகளை மேலும் அடிமையாக்கும் வகையில் பேஸ்புக் 13 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் செயலியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

 யூடியூப் தளம் - யூடியூப் கிட்ஸ்

யூடியூப் தளம் - யூடியூப் கிட்ஸ்

கூகுள் கீழ் இயங்கும் யூடியூப் தளத்தில் பல வகையான வீடியோக்கள், விளம்பரங்கள் வரும் நிலையில், இதன் மூலம் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதல் முறையாக யூடியூப் பார் கிட்ஸ் செயலியை அறிமுகம் செய்து மாபெரும் வெற்றி கண்டுள்ளது. சுமார் 10 கோடி முறை இந்தச் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது, இதில் விளம்பரங்களும், குழந்தைகளுக்கு அல்லாத வீடியோக்கள் வராது.

 பேஸ்புக் - கூகிள் போட்டி

பேஸ்புக் - கூகிள் போட்டி

யூடியூப் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்-ம் இதேபோன்ற வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மட்டும் அல்லாமல் மெசஞ்சர் பார் கிட்ஸ் என்ற செயலியையும் உருவாக்கி வருகிறது.

 மக்கள் கருத்து என்ன..?

மக்கள் கருத்து என்ன..?

பேஸ்புக்-ன் இந்தத் திட்டத்திற்கு மக்களும், அரசு அதிகாரிகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களாகிய உங்கள் கருத்து என்ன..? குழந்தைகளுக்கு இன்ஸ்டாகிராம் வேண்டுமா..? வேண்டாமா..? பதிலை கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Should we have Instagram for kids? What do you think about it?

Should we have Instagram for kids? What do you think about it?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X