சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு பாதிப்பு.. அடுத்தடுத்து பணிநீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய பல முக்கியத் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா சமீபத்தில் மோசமான காலாண்டு முடிவுகள் காரணமாகவும், வாடிக்கையாளர்களை இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பல மாத எச்சரிக்கைக்குப் பின்பு 11000 ஊழியர்கள் அல்லது 13 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

 

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் கடந்த 18 வருடத்தில் ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையில் இதுதான் அதிகம்.

டிக்டாக், யூடியூப் போன்ற முன்னணி நிறுவனங்களின் போட்டி காரணமாகப் பேஸ்புக் வாடிக்கையாளர்களை இழக்கத் துவங்கியுள்ளது. இதுவும் கடந்த 18 வருடத்தில் முதல் முறையாக நடக்கும் ஒரு விஷயமாகும்.

இந்த நிலையில் மெட்டாவின் Mass Layoff-ல் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியர்களாக இருக்கும் என்பது தெரியுமா..?

11000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஊழியர்கள் கண்ணீர்..!11000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஊழியர்கள் கண்ணீர்..!

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனத்தின் ஆசிய பிசிபிக் சந்தையின் தலைமையிடமாக விளங்கும் சிங்கப்பூர் அலுவலகத்தில் இந்த Mass Layoff மூலம் சுமார் 1000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் குறைந்தது 100க்கும் அதிகமானோர் டெக் ஊழியர்களாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுச் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் தரவுகள் படி சிங்கப்பூரில் சுமார் 1,77,100 பேர் employment pass வைத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றனர், இதில் 25 சதவீதம் பேர் அல்லது 45,000 பேர் இந்தியர்கள் என அரசு தரப்புத் தரவுகள் கூறுகிறது.

சிங்கப்பூர் employment pass
 

சிங்கப்பூர் employment pass

பொதுவாகச் சிங்கப்பூரில் employment pass என்பது கைதேர்ந்த மற்றும் திறமை மிக்க வெளிநாட்டவருக்குச் சிங்கப்பூரில் வந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்படும். இந்த employment pass வைத்துள்ளவர்கள் கட்டாயம் மாதம் 5000 சிங்கப்பூர் டாலர் சம்பாதிக்க வேண்டும்.

டெக் ஊழியர்கள்

டெக் ஊழியர்கள்

இப்படியிருக்கும் நிலையில் இந்தச் சம்பளத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர் டெக் ஊழியர்களுக்காகவும், இந்தியர்களாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். அப்படியிருக்கையில் மெட்டா உட்பட டெக் நிறுவன பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சந்தை நிலவரங்கள் தெரிவிக்கிறது.

சர்வதேச டெக் நிறுவனங்கள்

சர்வதேச டெக் நிறுவனங்கள்

சிங்கப்பூரில் இருக்கும் பெரும்பாலான சர்வதேச டெக் நிறுவனங்களின் தலைமை அலுவலகம் பெரும்பாலானவை புதிதாக ஊழியர்களைச் சேர்க்கப்படுவதை நிறுத்தியுள்ளது அல்லது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கப் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது. இவ்விரண்டுக்கும் அடிப்படை காரணம் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் தான்.

ஹெச்1பி விசா ஊழியர்கள்

ஹெச்1பி விசா ஊழியர்கள்

அதேபோல் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் அறிவித்த அதிரடியான பணிநீக்கத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர், அதாவது ஹெச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியா மற்றும் பிற நாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

60 நாள் கெடு

60 நாள் கெடு

ஹெச்1பி விசாவில் பணியாற்றும் ஊழியர்கள் 60 நாட்களுக்கு மேல் வேலையில்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியாது என்ற கட்டுப்பாடு இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மெட்டா, டிவிட்டர்

மெட்டா, டிவிட்டர்

மெட்டா பணிநீக்கம் அறிவிப்பை வெளியிடும் போது கூட ஹெச்1பி விசா ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தனிப் பிரிவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இதேபோல் டிவிட்டர் ஊழியர்களுக்கும் இந்தியா மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் அழைத்து வருகிறது.

சவால்

சவால்

ஒரு சில நிறுவனம் மட்டுமே பணிநீக்கம் செய்தால் கட்டாயம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்தியும், பணிநீக்கம் செய்து வரும் காரணத்தால் புதிய வேலை பெறுவதில் பெறுவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Singapore tech employees layoffs are impacting Indians who are in employment pass

Singapore tech employees' layoffs are impacting Indians who are in employment pass
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X