ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிமீ.. சூப்பர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஒரே ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை ஓடும் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்கள் பொதுவாக ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் 200 முதல் 300 கிலோமீட்டர் வரை ஓடும் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வால்வோ நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை ஓட்ட முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

 வால்வோ XC40 மாடல்

வால்வோ XC40 மாடல்

வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்யும் கார் புதிய வால்வோXC40 என்ற மாடல் கார் என்றும் இதுவொரு பிரிமியம் கார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 78KW பேட்டரி இருப்பதால் இந்த காரை ஒரே ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் வரை ஓட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் கிட்டதட்ட சென்னையிலிருந்து மதுரை வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

அயன் லித்தியம் பேட்டரி

அயன் லித்தியம் பேட்டரி

வால்வோ XC40 மாடல் காரின் பேட்டரி அயன் லித்தியம் பேட்டரி என்பதால் 400 கிலோ மீட்டர் வரை ஓட்ட முடியும் என்பதை நாங்கள் உறுதியாக கூறமுடியும் என வோல்வோ xc40 காரை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது

டெலிவரி எப்போது?

டெலிவரி எப்போது?

இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் முதல் ஏராளமானோர் இந்த காரை முன்பதிவு செய்திருப்பதாகவும் முன்பதிவு செய்து அனைவருக்கும் இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Single charge Electric car will go 400 km, what is the price?

This is the reason why its demand is also increasing very fast. Almost all the electric vehicle companies are there in the market.
Story first published: Saturday, October 8, 2022, 7:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X