சீனா-வில் சிங்கிள் டே கொண்டாட்டம்.. உருவானது எப்படி..? அனல் பறக்கும் ஷாப்பிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இதே நேரத்தில் சில ஜாலியான விஷயங்களை நாடு முழுவதும் பெரிய அளவில் கொண்டாப்படுவது உலக நாடுகள் மத்தியில் விநோதமாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் ஒவ்வொரு வருடமும் சிங்கிள் டே கொண்டாடப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்..? இந்த சிங்கிள் டே கொண்டாட்டம் உருவானது எப்படி..? சிங்கிள் டே வைத்து மிகப்பெரிய வர்த்தகம் உருவாகப்பட்டு உலக நாடுகளுக்கு வியப்பு அளிக்கிறது சீனா.

பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. கொடிக்கொடுத்த சீனா, சவுதி அரேபியா..! பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்.. கொடிக்கொடுத்த சீனா, சவுதி அரேபியா..!

நவம்பர் 11

நவம்பர் 11

ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் நவம்பர் 11 ஆம் தேதி சிங்கிள் டே கொண்டாடப்படுகிறது, பெயருக்கு ஏற்றால் போல் 11.11 ஆம் தேதி இந்த சிங்கிள் டே கொண்டாடப்படுகிறது. சிங்கிள் என்பது காதலர் தினத்திற்கு எதிரான நாள்..

அதாவது காதலியே கிடைக்காத ஆண்களும், காதலனே கிடைக்காத பெண்களும் கொண்டாடும் தினம் தான் இந்த சிங்கிள் டே

 

சிங்கிள் டே

சிங்கிள் டே

சிங்கிள் டே அல்லது பேச்சுலர் நாள், 1993 இல் சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் உருவானது. சிங்கிள் டே எப்படி உருவானது என பல கதைகள் இருந்தாலும், அனைவராலும் நம்பும்படியாகவும், ஒப்புக்கொண்ட ஒரு கதை உள்ளது.

நாஞ்சிங் பல்கலைக்கழகம்

நாஞ்சிங் பல்கலைக்கழகம்

1993 ஆம் ஆண்டில், நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியின் நான்கு ஆண் மாணவர்கள் காதலிகள் இல்லாமல் சிங்கிள் ஆக இருப்பதை கொண்டாடும் வகையில் சில பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கமிட் ஆகாத இளைஞர்கள்

கமிட் ஆகாத இளைஞர்கள்

பொதுவாக கல்லூரிகளில் கமிட் ஆகாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும், இதை தடுக்கும் வகையில் உருவான இந்த சிங்கிள் டே கல்லூரி விடுதி கொண்டாட்டம் நாஞ்சிங் பல்கலைக்கழகம் முழுவதும் பரவி, நாஞ்சிங் பகுதியில் இருக்கும் பிற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பரவியது

நாடு முழுவதும் பரவியது

இப்படி பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நவம்பர் 11 அன்று பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் உடன் சிங்கிள் டே கொண்டாடப்பட்டது. நாளிடைவில் இந்த கலாச்சாரம் நாடு முழுவதும் பரவி ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாட துவங்கினர்.

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

இதேபோல் சமுக வலைத்தளத்தின் எழுச்சிக்கு பின்பு சீனா முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டது, இதேபோல் அந்த நாளில் சமுக வலைதளம் மூழுவதும் சிங்கிள் டே பதிவாக மட்டுமே இருந்தது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 11.11 ஆம் தேதி அதிகாபரப்பூர்வமற்ற விடுமுறை அறிவிக்க துவங்கப்பட்டது.

அலிபாபா

அலிபாபா

இந்த சிங்கிள் டே சார்ந்த கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த நிலையில் 2009ல் இந்த நாள்-ஐ ஷாப்பிங் திருவிழாவாக மாற்ற வேண்டும் என திட்டத்துடன் 2009ல் சீனாவின் ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா சிஇஓ டேனியல் ஜாங் முதன் முதலில் 24 மணிநேர தள்ளுபடி ஷாப்பிங்-ஐ அறிவித்தார்.

தள்ளுபடி விற்பனை

தள்ளுபடி விற்பனை

தள்ளுபடி ஷாப்பிங்-ல் இளம் தலைமுறையினருக்கு அதிகம் தேவைப்படும், விரும்பும் பொருட்களுக்கு அதிகளவிலான தள்ளுபடி உடன் விற்பனை செய்யப்பட்டது. இது பெரிய வெற்றி அடையவே ஒவ்வொரு ஆண்டும் அலிபாபா தனது சிங்கிள் டே வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. அடுத்த சில வருடத்தில் அலிபாபா-வின் போட்டி நிறுவனமானJD.COM இணைந்தது.

அலிபாபா விற்பனை வளர்ச்சி

அலிபாபா விற்பனை வளர்ச்சி

அலிபாபா தனது முதல் சிங்கிள் டே விற்பனையில் 0.05 பில்லியன் யுவான் (0.01 பில்லியன் USD) மதிப்பிலான வர்த்தகத்தை பெற்ற நிலையில் 2021ல் யாரும் எதிர்பார்காத வரையில் 540.3 பில்லியன் யுவான் (84.5 பில்லியன் USD) மதிப்பிலான வர்த்தகத்தை பெற்று புதிய சாதனை படைத்தது.

JD.COM விற்பனை வளர்ச்சி

JD.COM விற்பனை வளர்ச்சி

இதேபோல் அலிபாபா-வின் போட்டி நிறுவனமான JD.COM 2017ல், 127.1 சீன யுவான் மதிப்பிலான வர்த்தகத்தை பெற்ற நிலையில், 2021ல் 349.1 சீன யுவான் மதிப்பிலான வர்த்தகத்தை பெற்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட வளர்ச்சி சிங்கிள் டே விற்பனை நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தற்போது கொண்டப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா

இந்தியாவின் தீபாவளி விற்பனை, அமெரிக்காவின் பிளாக் ஃப்ரைடே, கிறிஸ்துமஸ் விற்பனையை காட்டிலும் சீனாவின் சிங்கிள் டே விற்பனை பெரியதாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக சீனாவின் சிங்கிள் டே விற்பனை திகழ்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Single’s Day in China; World biggest shopping festival, how is it celebrated? how is it begins?

Single’s Day in China; World biggest shopping festival, how is it celebrated? how is it begins?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X