ஊழியர்கள் சாபம் சும்மா விடாது.. சிஇஓ சஸ்பெண்ட்.. ஏன் தெரியுமா?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல்டுமேன் சாக்ஸ் ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது பணக்கார வாழ்க்கையை வெளிப்படுத்தியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் அவரின் ஊழியர்கள் சம்பளம் பெறவில்லை.

 

டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்லின்க்-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கிரிஸ் கிர்ச்னர், தனது பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

HCL சிஇஓ விஜயகுமார் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. விப்ரோ, இன்போசிஸ் சிஇஓ அதிர்ச்சி..!HCL சிஇஓ விஜயகுமார் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. விப்ரோ, இன்போசிஸ் சிஇஓ அதிர்ச்சி..!

சொகுசு ஜெட்டில் பயணம் ஏன்?

சொகுசு ஜெட்டில் பயணம் ஏன்?

கிர்ச்னர் பிரத்யேக கோல்ப் போட்டிகளில் பங்கேற்கவும், கால்பந்து அணியினை வாங்குவதிலும் மும்முரம் காட்டியதாகவும், பிரபலங்களை சந்திக்கவும், தனது தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும் கூறப்படுகின்றது. இது அவரின் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் சம்பளம் வழங்கப்படாத நிலையில் இதெல்லாம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சொகுசு கார்

சொகுசு கார்


அதோடு 3 லட்சம் டாலர் முதல் 5 லட்சம் டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்பில் சுமார் 2.3 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையில்) ஃபெராரி சூப்பர் பாஸ்ட் காரினையும் வாங்கியுள்ளார்.

அமெரிக்க அரசிடம் இருந்து கொரோனா காலத்தில் சம்பளம் கொடுக்க கூட கஷ்டப்படுவதாக, ஸ்லின்க் 3.1 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.

நிறுவன பணத்தில் ஊழல்
 

நிறுவன பணத்தில் ஊழல்

ஸ்லின்க்-ன் தற்போதைய ஊழியர்கள் தரப்பில் கிர்ச்னர் நிறுவனத்தின் பணத்தில் விளையாடியதாகவும் கூறுகின்றனராம். மேலும் இந்த இடை நீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் கிர்ச்னரின் சொகுசு வழ்க்கை முறை பற்றி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஊழல் நடவடிக்கை

ஊழல் நடவடிக்கை

எனினும் மறு அறிவிப்பு வரும் வரையில் கிர்ச்னர் இடை நீக்கம் செயப்பட்டுள்ளார், இதனை நாங்கள் தீவிரமாக எடுத்துகொள்கிறோம் எனவும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கத்திலேயே நிதி வெளிப்படைத் தன்மை இல்லாதது குறித்து கூறிய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாகவும், எனினும் இது குறித்து நிர்வாகம் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Slync's CEO suspended for revealing lavish lifestyle: Employees not getting paid

Slync's CEO suspended for revealing lavish lifestyle: Employees not getting paid/ஊழியர்கள் சாபம் சும்மா விடாது.. சிஇஓ சஸ்பெண்ட்.. ஏன் தெரியுமா?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X