டீ கடையில் மாதம் 17 லட்சம் வருமானம்.. அசத்தும் விவசாயி மகன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்பிஏ படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளைஞர் ஒருவர் எம்பிஏ சீட் கிடைக்காததால் டீக்கடை வைத்து தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அகமதாபாத் நகரை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகனான பிரஃபுல் பில்லோர் என்பவர் டீக்கடை மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரஃபுல் பில்லோர் வாழ்க்கையில் நடந்த திருப்பம் என்ன? அவர் எப்படி கோடீஸ்வரர் ஆனார்? என்பதை தற்போது பார்ப்போம்.

ஆர்பிஐ ஒற்றை அறிவிப்பால் 36 பில்லியன் டாலர் சேமிப்பு.. ரஷ்யா, ஈரான் உடன் டீல்..!ஆர்பிஐ ஒற்றை அறிவிப்பால் 36 பில்லியன் டாலர் சேமிப்பு.. ரஷ்யா, ஈரான் உடன் டீல்..!

விவசாயி மகன்

விவசாயி மகன்

அகமதாபாத் நகரை சேர்ந்த விவசாயி பிரஃபுல் பில்லோர் என்பவர் CAT தேர்வுகளில் மூன்று தொடர்ச்சியாக தோல்வியடைந்த பிறகு எம்பிஏ கனவை கைவிட்டு, 2017ஆம் ஆண்டு 'மிஸ்டர் பில்லூர் அகமதாபாத்' என்ற பெயரில் எம்பிஏ சாய் வாலாவை நிறுவினார். அவர் எம்பிஏ கல்லூரியில் சேர்ந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பினார். ஆனால் அதற்கு மாறாக அவர் தனது கனவுக் கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத்திற்கு வெளியே ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தார்.

டீக்கடை

டீக்கடை

தனது தந்தையின் விருப்பம் காரணமாக உள்ளூர் கல்லூரியில் சேர்ந்த பிரஃபுல் பில்லோர், அந்த கல்லூரியில் படிப்பை தொடர முடியவில்லை. அதனால் 12 நாட்களில் கல்லூரியில் இருந்து வெளியேறினார். தந்தை மிகவும் வருத்தப்பட்டாலும் சொந்த தொழில் செய்து முன்னேறுவேன் என தந்தைக்கு வாக்கு கொடுத்தார் பிரஃபுல் பில்லோர்.

எம்பிஏ சாய்வாலா

எம்பிஏ சாய்வாலா

அதன்பிறகே அவர் அகமதாபாத்தில் எம்பிஏ சாய்வாலா என்ற டீக்கடையை ஆரம்பித்தார். பிரஃபுல் பில்லோர் ஆரம்பித்த டீக்கடை நன்றாக வருமானம் தர தொடங்கியதும் அவரது சகோதரர் விவேக் பில்லோரும் 2020ஆம் ஆண்டில் எம்பிஏ சாய் வாலாவில் இணை நிறுவனராக சேர்ந்தார்.

100 நகரங்கள்

100 நகரங்கள்

எம்பிஏ சாய் வாலா நிறுவனம் 2021 முதல் போபால், ஸ்ரீநகர், சூரத், டெல்லி போன்ற 100 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது. மேலும் இலக்குகளை அடைவதற்கான தற்போது மாதந்தோறும் 10-15 புதிய கடைகளை இந்நிறுவனம் திறந்து வருகிறது.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம்

ஆண்டுக்கு ரூ.20 லட்சம்

இந்த கடைகள் ஒவ்வொன்றும் எம்பிஏ சாய் வாலா என்ற பிராண்ட் பெயரில் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பெயரை பயன்படுத்தும் கடை உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் எம்பிஏ சாய் வாலா நிறுவனத்தின் பிரஃபுல் பில்லோருக்கு தர வேண்டும்.

மாதம் ரூ.17 லட்சம் வருமானம்

மாதம் ரூ.17 லட்சம் வருமானம்

அகமதாபாத்தில் உள்ள அசல் எம்பிஏ சாய் வாலா விற்பனை நிலையம் மாதம் ரூ.17 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக பிரஃபுல் பில்லோர் கூறுகிறார். இதற்கிடையில், ஒரு சராசரி எம்பிஏ சாய் வாலா கடையில் ஏழு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் மற்றும் ஒரு சிறிய விற்பனை நிலையத்தில் சுமார் ஐந்து பேருக்கு வேலை வாய்ப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இதன் அடிப்படையில், இந்நிறுவனம் அதன் அடுத்த 100 கடைகளின் மூலம் குறைந்தது 500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சென்னையில்

விரைவில் சென்னையில்

எம்பிஏ சாய் வாலா இதுவரை வட இந்தியாவில் விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது நாட்டின் தெற்குப் பகுதியிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பிரஃபுல் பில்லோர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். குறிப்பாக சென்னை, பெங்களூரு, பெல்காம், கோவா, திருப்பதி மற்றும் உள்பட ஒருசில இடங்களில் ஸ்டோர்களை தொடங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சொந்த தேயிலை பிராண்ட்

சொந்த தேயிலை பிராண்ட்

உலகம் முழுவதும் வளர வேண்டும் என்ற இலக்குடன் இந்தியாவில் உள்ள அனைத்து 1,900 பின் குறியீடுகள் மற்றும் 4000 நகரங்களில் தனது வணிகத்தை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவர்கள் சொந்தமாக தேயிலை இலை பிராண்டையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Son of farmer who failed CAT, turns Millionaire With MBA Chai Stall

Son of farmer who failed CAT turns Millionaire With MBA Chai Stall | டீ கடையில் மாதம் 17 லட்சம் வருமானம்.. அசத்தும் விவசாயி மகன்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X