பரிதாப நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானிகள்! ஏப்ரல், மேயில் சம்பளத்துக்கு வாய்ப்பே இல்ல ராஜா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கொரோனா வைரஸ் மட்டும் கையில் சிக்கினால் வைத்து செய்துவிடுவேன் என பலரையும் கடுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலானவர்கள், தனியார் கம்பெனிகள் மற்றும் அமைப்பு சாராத தொழில்களை நம்பித் தான் வாழ்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கொரோனாவால் வர வேண்டிய பதவி உயர்வு தொடங்கி வேலை இழப்பு வரை எல்லா பிரச்சனைகளும் கிளம்பி இருக்கிறது. இந்த பிரச்சனையில் ஸ்பைஸ் ஜெட் மட்டும் தப்பித்துவிடுமா என்ன?

விமான சேவை கம்பெனிகள்

விமான சேவை கம்பெனிகள்

இதில், அதிகம் அடி வாங்கிய கம்பெனிகள் என்றால் விமான சேவைத் துறைகளைச் சொல்லலாம். இந்த துறை, ஏற்கனவே வியாபாரம் செய்யும் போதே பல உலக காரணிகளால் அடி வாங்கும். இப்போது ஒட்டு மொத்த வியாபார செயல்பாடுகளே ஸ்தம்பித்து இருப்பாதால் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சரக் சரக் சம்பளம் கட்

சரக் சரக் சம்பளம் கட்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தன்னுடைய பெரும்பாலான விமானிகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சம்பளம் கொடுக்கப் போவதில்லையாம். சரி போனால் போகட்டும் என்கிற ரீதியில், பெரும்பாலான விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் கம்பெனியின் சரக்கு விமானங்களை இயக்க வாய்ப்பு கொடுக்க இருக்கிறார்கள். எனவே எல்லா விமானிகளுக்கும் சொற்ப சம்பளமாவது கிடைக்கும் என்கிறார்கள்.

ஸ்பைஸ் ஜெட் சரக்கு விமானம்

ஸ்பைஸ் ஜெட் சரக்கு விமானம்

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 5 சரக்கு விமானங்கள் இருக்கிறதாம். இந்த சரக்கு விமானங்கள் வழியாக மருத்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இந்தியவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் கொண்டு செல்ல, வர பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதோடு 2 பயணிகள் விமானத்தையும் சரக்கு விமான சேவைக்கு கொண்டு வந்து இருக்கிறார்களாம்.

நோ பிசினஸ்

நோ பிசினஸ்

கடந்த மார்ச் 24, 2020 அன்று பிரதமர் அறிவித்த, கொரோனா வைரஸ் லாக் டவுனுக்கு பின், இந்தியாவில் எல்லா விமான சேவை கம்பெனிகளும் தங்கள் விமானங்களை இயக்க முடியாமல் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே ஸ்பைஸ் ஜெட் கம்பெனி, தன் கேபின் குழுக்களுக்கு சுமார் 30 சதவிகிதம் வரை சம்பளத்தை குறைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுப்பு

விடுப்பு

ஏற்கனவே, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள், சம்பளம் இல்லாமல் விடுமுறையில் இருப்பதாக, அந்த நிறுவனத்தின் முதன்மைச் நிர்வாக இயக்குநர் (CMD) அஜய் சிங் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணமாக விமான சேவை நிறுவனத்துக்கு வருவாய் இல்லாததையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

spicejet said many of their pilots will not be paid for april may

The indian airline company spice jet said that many of their pilots will not be paid for April and may this year. But creating a roster for all the pilots to operate cargo planes.
Story first published: Wednesday, April 29, 2020, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X