வருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர நஷ்டம் 462.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதிகளவு செலவினங்களால் தான் இந்த நஷ்டம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..!

மேலும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை தரையிறக்குவது மற்றும் கணக்கியல் விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நஷ்டத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த ஜூன் காலாண்டில் குறைந்த செலவினங்களால் 261.7 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர நஷ்டம் 389.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மும்பை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..! பிரதமர் பெருமித அழைப்பு..!உலகிலேயே முதலீடு செய்ய சரியான நாடு இந்தியா தான்..! பிரதமர் பெருமித அழைப்பு..!

நஷ்டத்தையே கண்டிருந்தாலும், இந்த நிறுவனத்தின் வருவாய் 2,845.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,874,.8 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தனது சேவையில் புதிய இடங்களை சேர்த்ததுடன், பயணிகள் மற்றும் சரக்குக் விமானங்களையும் விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் செலவினங்கள் மிக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 3,537.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,286.65 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது எரிபொருள் விலையேற்றம், விமான நிலைய கட்டணங்கள் அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக எரிபொருள் செலவினமானது 37.51 சதவிகிதம் அதிகரித்து, 1,162.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே விமான நிலைய குத்தகை கட்டணம் 63 சதவிகிதம் அதிகரித்து, 292.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல் விமான பராமரிப்பு செலவும் 43.92 சதவிகிதம் அதிகரித்து 292.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே தொழில் துறையின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், இதன் தாக்கம் தெளிவாக தெரிகிறது. எனினும் விமான துறை இழந்த வேகத்தை விரைவில் மீண்டும் பெறும் என்று நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது கிட்டதட்ட 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 107 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spicejet second quarter loss increased Rs.463 cr on higher costs

Spicejet second quarter loss increased Rs.463 cr on higher costs. And its shares down in nearly 6%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X