இதுதான்டா பெஸ்ட் நிறுவனம்.. Spotify-ஐ புகழ்ந்து தள்ளும் ஊழியர்கள்.. ஏன்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் ஊழியர்களின் Stress பிரச்சனையைச் சரி செய்யப் பல நிறுவனங்கள் தானாக முன்வந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஊழியர்களுக்குப் பெரிய நிறுவனங்கள் போல் ஆடம்பரமான சலுகைகளையும் வசதிகளையும் அளிக்க முடியாத சிறிய நிறுவனங்கள் தற்போது புதிய ஐடியா-வை பின்பற்றி வருகின்றனர். இதில் தற்போது Spotify நிறுவனமும் சேர்ந்துள்ளது.

ரெசிஷனில் தவிக்கும் உலக நாடுகள், கெத்து காட்டும் இந்தியா.. ஆனா ஒரு பிரச்சனை..! ரெசிஷனில் தவிக்கும் உலக நாடுகள், கெத்து காட்டும் இந்தியா.. ஆனா ஒரு பிரச்சனை..!

ஊழியர்களின் நலன்

ஊழியர்களின் நலன்

பொதுவாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஊழியர்களின் நலனில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தும், காரணம் ஊழியர்கள் தாங்கள் செய்யும் வேலை விருப்பத்துடன் செய்தால் மட்டுமே அவுட்புட் சிறப்பாக இருக்கும் எனப் பல பெரிய நிறுவனங்கள் நம்புகிறது.

பெரிய நிறுவனங்கள்

பெரிய நிறுவனங்கள்

இதனாலேயே கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள், ஆரக்கிள் போன்றவை ஊழியர்களுக்கு உட்காரும் சேர் முதல் உணவு, போக்குவரத்து எனப் பல வசதிகளைச் செய்துக்கொடுக்கிறது. அனைத்திற்கும் மேலாக அலுவலகம் இருக்கும் பகுதியின் விலைவாசி, வீட்டு வாடகை அளவுகளைப் பொறுத்தும் சம்பளத்தை உயர்த்தி அளிக்கும் வழக்கத்தையும் இந்தப் பெரிய டெக் நிறுவனங்கள் அளிக்கிறது.

சிறிய நிறுவனங்கள்

சிறிய நிறுவனங்கள்

இதுபோன்ற ஆடம்பரமான சலுகைகளை வழங்க முடியாத சிறிய நிறுவனங்கள் ஊழியர்களின் மன உளைச்சல் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் ஓரே நேரத்தில் விடுமுறை அளிக்கும் திட்டத்தைப் பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது. இது ஊழியர்களுக்கும் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் நிர்வாகத்திற்குச் செலவுகள் குறைவானதாகவும் உள்ளது.

Spotify நிறுவனம்

Spotify நிறுவனம்

இந்த வகையில் Spotify நிறுவனம் நவம்பர் 1 முதல் நவம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் இருக்கும் அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வார விடுமுறை

ஒரு வார விடுமுறை

இதை ஸ்பாடிஃபை நிறுவனம் ஊழியர்களுக்கான Wellness Week எனக் கூறுகிறது. ஒரு வாரம் பணி குறித்து எவ்விதமான டென்ஷனும் இல்லாமல் வேலையை முழுமையாக விடுத்து தங்களது விருப்பம் போல் ஒரு வாரத்தைச் செலவிட்டு புத்துயிர் பெற வாய்ப்பு அளித்துள்ளது.

2வது ஆண்டு

2வது ஆண்டு


2021ல் முதல் முறையாக இதுபோன்ற அறிவிப்பை Spotify நிறுவனம் வெளியிட்டது, இது பெரிய அளவில் ஊழியர்கள் மத்தியிலும், வர்த்தகத்திலும் பலன் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் Wellness Week கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. Spotify அலுவலகங்கள் நவம்பர் தொடக்கத்தில் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருக்கும் என Spotify நிறுவனத்தின் HR பிரிவின் தலைமை அதிகாரி Katarina Berg அறிவித்தார்.

மீஷோ

மீஷோ

இதேபோல் இந்தியாவில் ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் எனச் செல்லமாக அழைக்கப்படும் ரீசெல்லர் வர்த்தகத் தளமான மீஷோ அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 22, 2022 முதல் நவம்பர் 1, 2022 வரையில் தங்களை "ரீசெட் செய்து ரீசார்ஜ்" செய்யும் வரையில் 11 நாள் விடுமுறை அறிவித்தது மறக்க முடியும். மீஷோ நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற விடுமுறையை 2வது ஆண்டாக மீஷோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WeWork நிறுவனம்

WeWork நிறுவனம்

இதேபோல் WeWork நிறுவனம் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஆண்டுத் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடவும், ஊழியர்கள் வொர்க் லைப் பேலென்ஸ்-ஐ மேம்படுத்தவும் 10 நாள் விடுமுறை அறிவித்தது. இதன் மூலம் ஊழியர்கள் relax மற்றும் re-energise செய்ய முடியும் என்று வீவொர்க் நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவின் தலைமை மக்கள் மற்றும் கலாச்சாரத் தலைவர் பிரித்தி ஷெட்டி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spotify offices will remain closed on 1 November to 5 November for a Wellness Week

Spotify offices will remain closed on 1 November to 5 November for a Wellness Week for employee benefit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X