திவாலான இலங்கை.. வெளியானது முக்கிய அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாறு காணாத மோசமான பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் பொது மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவை இலங்கையை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ரூ. 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ? ரூ. 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ?

Recommended Video

Srilanka Economic Crisis | திவாலான இலங்கை.. முக்கிய அறிவிப்பு #International

இந்தப் பெரும் சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் இலங்கைக்கு உலக வங்கியின் 160 மில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக இருந்தாலும். தற்போது இலங்கை முதல் தடவையாகத் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி

இன்று இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் நந்தலால் வீரசிங்க கூறுகையில் நாட்டின் மொத்த கடன் அளவை மறுசீரமைக்கும் வரையில் இலங்கை அரசால் கடனுக்கான எந்தப் பேமெண்ட்-ஐயும் செலுத்தி முடியாது என்று கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக்குக் கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர் என நந்தலால் வீரசிங்க முக்கிய அரசு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

78 மில்லியன் டாலர்

78 மில்லியன் டாலர்

இதன் மூலம் முதல் முறையாக இலங்கை அரசு ஏப்ரல் 18 ஆம் தேதி கடனாளர்களுக்குச் செலுத்த வேண்டி 78 மில்லியன் டாலர் மதிப்புடைய கூப்பன்களை அளிக்க 30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையிலும் செலுத்தவில்லை. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இலங்கை திவாலாகியுள்ளது என அறியப்படுகிறது.

40 சதவீத பணவீக்கம்

40 சதவீத பணவீக்கம்

இலங்கையில் ஏற்கனவே பணவீக்கம் 30 சதவீதமாக இருக்கும் நிலையில் வரவிருக்கும் மாதங்களில் இது 40 சதவீதமாக ஆக அதிகரிக்கும் என நந்தலால் வீரசிங்க கூறுகிறார். தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 உணவு மற்றும் எரிபொருள்

உணவு மற்றும் எரிபொருள்

உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அன்னிய செலாவணி இருப்பு கூட இல்லாமல் உள்ளது இலங்கை. இந்தச் சூழ்நிலையில் 40 சதவீத பணவீக்கம், திவாலான நிலை ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1948க்குப் பின்

1948க்குப் பின்

ஜனவரி முதல் வெளிநாட்டில் இருந்து இலங்கை வாங்கிய அத்தியாவசிய பொருட்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை அரசு சுமார் 12.6 பில்லியன் டாலர் தொகைக்கான பேமெண்ட்-ஐ நிறுத்தி வைத்துள்ளது. 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை முதல் முறையாக வாங்கிய கடனுக்குத் திருப்பி செலுத்த முடியாமல் திவாலாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri Lanka enters default by non payment of $78 million coupon

Sri Lanka enters default by non payment of $78 million coupon திவாலான இலங்கை.. வெளியானது முக்கிய அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X