இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து போச்சு.. ரணில் விக்கிரமசிங்க வேதனை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையின் இன்றைய நிலை கச்சா எண்ணெய் வாங்க முடியாத அளவுக்கு பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் நிலவி வரும் அன்னிய செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கடும் மின் வெட்டுகள், கடன் பிரச்சனை என பலவற்றையும் எதிர்கொண்டுள்ளது.

இதற்கிடையில் தான் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பார்லிமெண்டில், கச்சா எண்ணெய் வாங்க கூட இலங்கையிடம் அன்னிய செலாவணி இல்லை என்று தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் 2 வாரம் ஷட்டவுன்.. எதற்காக தெரியுமா..?!

முடங்கும் நிலை ஏற்படலாம்

முடங்கும் நிலை ஏற்படலாம்

ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை காரணமாக, கச்சா எண்ணெய் மேற்கோண்டு வாங்க முடியாத சூழல் இருந்து வருகின்றது. ஒன்று யாரேனும் இலங்கைக்கு நிதி உதவி அல்லது கடனுதவி செய்ய வேண்டும். அப்படி இல்லையேல் எண்ணெய் நிறுவனங்கள் கடனாக எண்ணெய் கொடுக்க வேண்டும். இதில் எது நடக்காவிட்டாலும், இலங்கை முற்றிலும் முடங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இலங்கையின் கோரிக்கை

இலங்கையின் கோரிக்கை

எரிபொருள் மட்டும் அல்ல, கேஸ், உணவு பொருட்கள், மின்சாரம் என எல்லாவற்றிற்கும் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. ஆக இலங்கைக்கு இது அவசரமாக தேவைப்படும் உதவியாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இதனை கருத்தில் கொண்டு இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மிக மோசமான சரிவு
 

மிக மோசமான சரிவு

இலங்கை அரசு 1948-க்கு பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக உணவு, மருந்துவ பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் என பலவற்றிற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . இலங்கைக்கு உதவும் விதமாக இந்தியா உதவிகளை வழங்கி வருகின்றது. எனினும் இந்த கடனை இலங்கை திரும்ப செலுத்த வேண்டும். இந்தியாவும் அதன் சக்திக்கு ஏற்ப தான் உதவ முடியும் என கூறியுள்ளார்.

ரணில் எச்சரிக்கை

ரணில் எச்சரிக்கை

ஆரம்பத்தில் இருந்தே பொருளாதாரத்தின் சரிவினை மெதுவாக்கியிருக்க வேண்டும். ஆனால் நாம் செய்யவில்லை. இன்று கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளோம். தற்போது வீழ்ச்சியடைவதற்கான அறிகுறியை காண்கிறோம். எனினும் இந்த நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். அப்படி வரவில்லை எனில் இலங்கையில் நிலவி வரும் எந்த பிரச்சனைக்கும் தீர்வினை எட்ட முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

முதல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

முதல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவு பற்றாக்குறைக்கு அப்பாற்பட்டு இன்னும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளோம். நமது பொருளாதாரம் முழுவதும் சரிவினைக் கண்டுள்ளது. இது தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனையே. இந்த பிரச்சனைக்கு மறுமலர்ச்சி மூலம் தீர்வு காண முடியும். இதற்கு முதலில் அன்னிய செலாவணி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sri lanka இலங்கை
English summary

Sri lanks's economy collapsed says PM Ranil wikkremesinghe

With Sri Lanka unable to buy crude oil today, Prime Minister Ranil Wickremesinghe has said the Sri Lankan economy is in shambles.
Story first published: Thursday, June 23, 2022, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X