நமக்கு கிரிக்கெட் காட்டுறவங்களுக்கே இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஸ்டார் இந்தியா கடந்த 2019ம் நிதியாண்டில் 1,216 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த நிறுவனம் இதற்கு முந்தைய ஆண்டு 287.7 கோடி ரூபாய் லாபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நமக்கு கிரிக்கெட் காட்டுறவங்களுக்கே இத்தனை ஆயிரம் கோடி நஷ்டமா..?

இந்த நிறுவனம் அதன் மார்க்கீ விளையாட்டு சொத்துகாக 4,000 கோடி ரூபாய் செலவினை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வருவாய் 35 சதவிகிதம் அதிகரித்த போதிலும் இந்த நஷ்டத்தினை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மொத்த நடவடிக்கைகளின் மூலம், கடந்த நிதியாண்டின் மொத்த வருவாய் 12,341 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 9,149 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இது தவிர விளம்பர வருவாய் 49 சதவிகிதம் அதிகரித்து 7,311 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே விநியோக வருவாய் 9 சதவிகிதம் அதிகரித்து 4,128 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மற்ற விற்பனை மற்றும் சேவைகளில் இருந்து 902 கோடி ரூபாய் வருவாய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் மொத்த செலவினங்கள் 58 சதவிகிதம் அதிகரித்து 13,707 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 8,694 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது.

இது தவிர இயக்க செலவினங்கள் மட்டும் 66 சதவிகிதம் அதிகரித்து 10,296 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஊழியர்களுக்கான சம்பள செலவும் 34 சதவிகிதம் அதிகரித்து 1,198 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதே சந்தைப்படுத்துதலுக்கான செலவு 57 சதவிகிதம் அதிகரித்து 1,168 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஸ்டார் இந்தியா மற்றும் வால்ட் டிஸ்னி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் குப்தா வெளியேறிய சில வாரங்களிலேயே இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தனது புதிய சேவையை அமெரிக்காவில் தொடங்கிய வால்ட் டிஸ்னி, ஹாட்ஸ்டார் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு அசல் உள்ளடக்கத்தை கொண்ட சேவையை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஸ்டார் இந்தியா அதன் தற்போதைய சந்தா திட்டங்களை அப்படியே தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் பிரீமியம் மாதத்திற்கு 299 ரூபாய் எனவும், இதே வருடத்திற்கு 999 ரூபாய் எனவும் கூறியுள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் விஐபி வருடத்திற்கு 365 ரூபாய்க்கும், அதுவும் டிஸ்னி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் இதே கட்டணத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: star india net loss
English summary

Star india reported loss Rs.1,216 cr in last financial year

Star India reported loss Rs.1,216 cr in last financial year. But last financial year it’s made Rs.287.7 cr profit. And star India plans to continue with its current subscription plans.
Story first published: Wednesday, November 27, 2019, 14:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X