குறைந்த சம்பளத்தில்.. நல்ல அறிவாளிகளை வேலைக்கு தேடும் ஸ்டார்டப்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கொரோனாவினால் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியவில்லை. நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல அறிவாளிகள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராகியுள்ளனராம்.

 

இது குறித்து லைவ் மிண்டில் வெளியான செய்தி ஒன்றில், e-waste recycling service Binbag என்ற மின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனம், கடந்த வாரம் project manager வேலைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளரான அச்சித்ரா போர்கோஹெய்ன், இதற்கான சரியான ஆட்களை மே இறுதி நிரப்ப முடியாது என்று நினைத்திருந்தராம்.

திறமையானவர்கள் கிடைப்பது கடினம்

திறமையானவர்கள் கிடைப்பது கடினம்

மேலும் போர்கோஹெய்ன் கவுகாத்தியில் ஒரு ஆலையை அமைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பொதுவாக அசாமிற்கு இடம் பெயர தயாராக இருக்கும் திறமையாளர்களைக் கண்டிபிடிப்பது மிக கடினம் என்றும் கூறியிள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை போல அல்லாமல் ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து 8 விண்ணப்பதாரர்கள் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதில் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் இணை இயக்குனரிடமிருந்து கூட தனக்கு விண்ணப்பம் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஸ்டார்டப்புகளுக்கு சாதகம்

ஸ்டார்டப்புகளுக்கு சாதகம்

ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, நல்ல அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்த நிறுவனங்கள் தூண்டப்படுகிறது. இந்த நிலையில் அனுபவம் மிக்கவர்கள், வேலை இழந்தவர்கள், அல்லது 30 சதவீதம் வரை சம்பள குறைப்பு என இருப்பவர்களை, ஸ்டார்டப் நிறுவனங்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

குறைந்த சம்பளம்
 

குறைந்த சம்பளம்

TheOther 2 Thirds Consulting நிறுவனத்தின் நிறுவனர் பிரசாந்த் ஸ்ரீவாஸ்தவா தனது தொழில்நுட்ப குழுவுக்கு நான்கு பேரினை பணியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவரின் குழுவில் இருந்து வெளியில் போனவர்கள், மீண்டும் தற்போதைய சம்பளத்திலோ அல்லது சம்பளம் குறைவாகவோ அவருடன் மீண்டும் சேர தயாராக உள்ளதாக கூறுகிறார். இதில் மேற்கூறிய நான்கு நபர்களில் ஒருவர் மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் கூறியுள்ளார்.

சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை

சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை

ஏனெனில் அந்த ஊழியர் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்பு நோட்டீஸ் பீரியடில் பணிபுரிந்து வருவதாகவும், மேலும் அவர் தன்னுடன் 33% சம்பள குறைப்பில் பணிபுரிய ஒப்புக் கொண்டார் எனவும் ஸ்ரீ வாஸ்தவா என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இப்படி கொரோனா பரவல் காரணமாக பலரும் குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என கிடைத்த வேலையில் சேரத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Start ups hire top talent at lower salaries during slowdown period

coronavirus pandemic already-slowing economy is pushing experienced professionals to consider jobs and roles they may not otherwise have contemplated.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X