ரூ.15,000 ரூபாயில் வணிகம்.. மாத வருமானத்தை கேட்டா அசந்துருவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுயமாக தொழில் செய்ய வேண்டும்? யாரையும் சார்ந்து இருக்க கூடாது என நினைக்கிறீர்களா? குறைந்த முதலீடு தான் செய்ய முடியுமா? அப்படி எனில் இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கு தான்.

எல்லோருக்குமே வணிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் என்ன செய்யலாம், முதலீடு எனும் போதே 50% பேர் பின் தங்கி விடுகின்றனர். இது இரண்டு இருந்தும் வெற்றிகரமாக சாதிப்பவர்கள் ஒரு சிலரே.

அப்படி தொழில் செய்ய நினைக்கும்போது நல்ல நல்ல ஐடியாக்களே இருந்தாலும், மிகப்பெரிய தடையாய் இருப்பது பணம் தான். இது எல்லாவற்றையும் தாண்டி இன்று தொழில்துறையில் சாதித்தவர்களும் உண்டு.

TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..! TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!

சொந்த தொழில் செய்யணும்

சொந்த தொழில் செய்யணும்

ஆக குறைந்த முதலீட்டில் ஏதேனும் தொழில் செய்ய வேண்டும். பெரியளவில் லாபம் இல்லாவிட்டாலும், நிரந்தரமாக ஒரளவு வருமானம் வேண்டும் என்பது தான் பலரும் நினைக்கும் ஒரு விஷயம். ஆக அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். அதிலும் தலைப்பினை படித்த சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். வெறும் 15,000 ரூபாயில் என்ன வணிகம் செய்ய முடியும். அப்படி என்ன வணிகம்? தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று? வாருங்கள் பார்க்கலாம்.

ஸ்கிராப்

ஸ்கிராப்

நாம் இன்று பார்க்கவிருப்பது ஸ்கிராப் எனப்படும் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களின் வணிகமாகும். இதனை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தும் கூட செய்ய முடியும். இதற்கென பெரியளவில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்று ஸ்கிராப் வணிகம் செய்து பெரிய அளவில் உயர்ந்த பல தொழிலதிபர்கள் நாட்டில் உண்டு.

இந்தியாவில் உருவாக்கப்படும் கழிவு

இந்தியாவில் உருவாக்கப்படும் கழிவு

இது நிச்சயம் கைகொடுக்கலாம். நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டன்னுக்கு அதிகமான கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 277 மில்லியன் டன்னுக்கும் அதிகமான குப்பைகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. இவ்வளவு கழிவுபொருட்கள் வெளியேற்றப்பட்டாலும், அதனை மறுசுழற்சி செய்வது என்பது மிக குறைவு.

லட்சக் கணக்கில் லாபம்

லட்சக் கணக்கில் லாபம்

தற்போதைய காலகட்டங்களில் கழிவு பொருட்களில் இருந்து அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள், என பலவகையில் வியாபாரமாக சிந்தனையாளர்கள் உருமாற்றி வருகின்றனர். இந்த குப்பைகளை பயன்படுத்தி பலரும் தங்களது எதிர்காலத்தினை பிரகாசமாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் லட்சக் கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றனர்.

 டயரில் சேர்

டயரில் சேர்

ஆனால் இது போதாது. இன்னும் குப்பைகளில் இருந்து ஏராளமானவற்றை செய்யலாம். உதாரணத்திற்கு வீணாய்போன டயர்கள் மூலம் அமரும் நாற்காலிகள். இதனை போன்று தற்போது அமேசானில் கிடைக்கிறது. இதன் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. இதுபோன்ற மரம், கைவினைப்பொருட்கள் என ஏராளமான வணிக ஐடியாக்கள் ஸ்கிராப்பில் புதைந்துள்ளன.

 எங்கே விற்பனை?

எங்கே விற்பனை?

இதனை எங்கே விற்பனை செய்வது என யோசிக்கலாம். இதனை அமேசான், பிளிப்கார்ட் மட்டும் அல்ல, சமூக வலைதளங்கள், மூலம் மார்கெட்டிங் செய்யலாம். தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்கப்பட்ட பழங்கால பொருட்களை, மக்கள் மீண்டும் நாடத் தொடங்கியுள்ளனர். இதனை உங்களது கற்பனை திறனுக்கு ஏற்பட்ட பட்டை தீட்டி, மெருகேற்றி, வரைந்தும் விற்பனை செய்யலாம்.

செலவு குறைவு

செலவு குறைவு

ஏற்கனவே இது போன்று பலரும் தங்களது வியாபாரத்தினை செய்தாலும், கிராமப்புற பகுதிகளில் இது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆக நீங்கள் உங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் எது மலிவாக கிடைக்கும், எது உபயோகமானதாக இருக்கும்,எது எளிதில் கிடைக்கும் என்பதனை பொறுத்து, உங்களது தொழிலை தொடங்கலாம். இதற்கான மூலதன பொருட்களை உங்களின் அக்கம் பக்கத்தில் இருந்தும் பெறலாம். குப்பை கழிவுகள் எனும் போது செலவினமும் குறைவு தான்.

லாபம் எவ்வளவு?

லாபம் எவ்வளவு?

தேவையானதை எடுத்துக் கொண்டு மீதமுள்ள குப்பைகளை அகற்றிவிடலாம். இதனையும் மறுசுழற்சி செய்து விற்பனை செய்யலாம். இவ்வாறு குப்பை கழிவுகள் மூலம் வணிகம் செய்யும் பலரும், லட்சக் கணக்கில் லாபம் ஈட்டி வருவது நமக்கு ஒரு சிறந்த உதாரணம் எனலாம். இதில் காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் என தனித் தனியாக பிரித்தும் அனுப்பலாம். இப்படி ஒரே வணிகத்தில் பல்வேறு வாய்ப்புகளும் கொட்டி கிடக்கின்றன.

மூலதனம் இது தான்

மூலதனம் இது தான்

இதற்கு ஆரம்பத்தில் போதிய இட வசதியும், சிறிய அளவிலான முதலீடும் இருந்தாலே போதுமானது. உதாரணத்திற்கு போதுமான இடவசதி இருப்பின், அதனுடன் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் முதலீடு இருந்தால் கூட போதுமானது. ஆரம்ப காலக்கட்டத்தில் இருசக்கர வாகனமே கூட போதுமானதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Start with Just Rs.15,000, earn many thousands every month in this business

Start with Just Rs.15,000, earning many thousands of every month in this business/ரூ.15,000 ரூபாயில் வணிகம்.. மாத வருமானத்தை கேட்டா அசந்துருவீங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X