JSW சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.100 கோடி முதலீடு.. எஸ்பிஐ அசத்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தற்போது மிகப்பெரிய முதலீட்டாளராகவும் மாறியுள்ளது.

இது ஜேஎஸ்டபள்யூ குழுமத்தினை சேர்ந்த, ஜேஎஸ்டபள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால அறிவித்துள்ளது.

இந்த முதலீடானது கட்டாயமாக மாற்றக்கூடிய விருப்ப பங்குகளாக (compulsorily convertible preference shares ) செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வணிக விரிவாக்கம்

வணிக விரிவாக்கம்

எஸ்பிஐ-யின் இந்த முதலீடானது இந்த நிறுவனத்தின் மூலதனத்தினை மேமம்படுத்தவும், வணிகத்தினை விரிவாக்கம் செய்யவும் பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் தற்போது வருடத்திற்கு 14 மில்லியன் டன்னாக உள்ள நிலையில், இதனை 25 மில்லியன் டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

CCPS என்றால் என்ன?

CCPS என்றால் என்ன?

CCPS என்பது கட்டாயம் மாற்றக்கூடிய விருப்ப பங்கு ஆகும். இது அப்பங்குகள் வைத்திருப்போரை, பொதுப்பங்குகளாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பினை உள்ளடக்கியது. வழக்கமாக முன்பே தீர்மானிக்கப்பட்ட தேதிக்கு பின்பாக எப்போது வேண்டுமானாலும் பொதுப்பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

எஸ்பிஐ-யின் முதலீடினை பெற்றிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஜே எஸ் டபள்யூ சிமெண்டின் மூலோபாய முதலீட்டாளராக எஸ்பிஐயினை வரவேற்கிறோம். எஸ்பிஐ-யின் இந்த வாய்ப்பினை நாங்கள் நலல் விதத்தில் பயன்படுத்திக் கொள்வோம் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பர்த் ஜிண்டால் கூறியுள்ளார்.

மிகப்பெரிய முதலீடு

மிகப்பெரிய முதலீடு

எஸ்பிஐ-க்கு முன்னதாக அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இன்க் மற்றும் சினெர்ஜி மெட்டல்ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனங்கள் ஜே எஸ் டபள்யூ சிமெண்ட் நிறுவனத்தில் முதலீடுகளை செய்துள்ளன.
எஸ்பிஐ-யின் முதலீடு மூலம் 1,500 கோடி ரூபாய் முதலீட்டினை நெருங்கியுள்ளது.

எங்கெங்கு?

எங்கெங்கு?

ஜே.எஸ். டபள்யூ சிமெண்ட், ஜே.எஸ். டபள்யூ குழுமத்தின் ஒரு பகுதியாகும். தற்போதைய நிலவரப்படி 14 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இது தற்போது கர்நாடகாவின் விஜயா நகர், ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்த நந்தியால், மேற்கு வங்கத்தினை சேர்ந்த சல்போனி, ஒடிசாவினை சேர்ந்த ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவினை சேர்ந்த டோல்வி உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State bank of India acquired minority stake in JSW cement for Rs.100 crore

State bank of India acquired minority stake in JSW cement for Rs.100 crore/ஜேஎஸ்டபள்யூ குழுமத்தில் ரூ.100 கோடி முதலீடு.. எஸ்பிஐ அசத்தல்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X