அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 13,553 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 அடமான சொத்துக்களை ஏலத்தில் விட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

நிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 26ம் தேதி 1,000 சொத்துக்களுக்கான மிகப் பெரிய ஏலத்தினை ஆன்லைனில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஏலத்தில் வீடுகள், தொழில் துறை மற்றும் வணிக பிரிவுகள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வங்கிக்கு உரிமை உண்டு

வங்கிக்கு உரிமை உண்டு

மேலும் இந்த ஏலமானது ரிசர்வ் வங்கியின் அறிவுறைப்படி நடத்தப்படும் என்றும், வங்கி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கி விதிமுறைகள் ஒழுங்குமுறை தேவைகளை உள்ளடக்கும் அதே வேளையில், ஒரு சட்ட செயல்முறை மூலம் நிலுவைத் தொகையை திரும்ப பெற வங்கிக்கும் உரிமை உண்டு என்றும் இவ்வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கவர்ச்சிகரமான முன்மொழிவு

கவர்ச்சிகரமான முன்மொழிவு

எஸ்பிஐ ஒரு அறிக்கையில், அசையா சொத்துக்களை அடமானம் வைக்கும்போதோ, அல்லது நீதிமன்ற உத்தரவின் படி இணைக்கப்படும் போது இது மிகவும் வெளிப்படையானது என்றும் கூறியுள்ளது. ஆக இது ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கவர்ச்சிகரமான முன்மொழிவாக மாற்றக்கடிய அனைத்து தொடர்புடைய விவரங்களையும் இது வழங்குகிறது.

வாராக்கடன் அதிகரிப்பு
 

வாராக்கடன் அதிகரிப்பு

ஆக வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு இது தேவையான விவரங்களை வழங்கும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு அடமானம் வைத்துள்ள சொத்துகள் மூலம் நிலுவையில் உள்ள வாராக்கடன் அளவானது இதற்கு முந்தைய ஆண்டினை காட்டிலும், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இரண்டு மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

இருமடங்கு அதிகரிப்பு

இருமடங்கு அதிகரிப்பு

குறிப்பிட்டு சொல்லப்போனால் டிசம்பர் 2019வுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 13,553 கோடி ரூபாயாக இவ்வகையான வாராக்கடன் மதிப்பு இருந்தது. இதுவே இது முந்தைய ஆண்டு டிசம்பர் 2018 ம் காலாண்டில் வெறும் 6,617 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

என்ன தேவை?

என்ன தேவை?

ஆக இதுகுறித்தான ஏலத்திற்கான விளம்பரத்தினை வங்கி செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விளம்பரங்களில் தேவையான தகவல்களும், எப்படி இந்த ஏலத்தில் கொள்ளலாம் எனவும், இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை,இது பற்றிய தகவல்களை இணையத்தில் (https://sbi.co.in/web/sbi-in-the-news/auction-notices/mega-e-auction) என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State bank of India plans to conduct auction for 1000 properties on February 26

SBI will conduct a mega electronic auction for 1,000 properties on February 26.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X