தீபாவளி ஷாப்பிங்-ஐ பாதுகாப்பாக செய்வது எப்படி.. கூகுள்-ன் 3 முக்கிய டிப்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் தீபாவளி பண்டிக்கையையொட்டி மக்கள் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவே விரும்புவதாகத் தெரிகிறது. ஒருபக்கம் கொரோனா தொற்று மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், கூட்ட நெரிசலைத் தடுக்கவும் ஆன்லைன் ஷாப்பிங்-ஐ தான் அதிகம் விரும்புகின்றனர்.

 

இப்படியிருக்கையில் இந்தத் தீபாவளி பண்டியின் போது ஆன்லைன் தளத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூகுள் முக்கியமான 3 டிப்ஸ் மக்களுக்கு வழங்கியுள்ளது.

தீபாவளி ஷாப்பிங் துவங்கியாச்சா.. கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.. முதல்ல இதைப் படிங்க..! தீபாவளி ஷாப்பிங் துவங்கியாச்சா.. கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.. முதல்ல இதைப் படிங்க..!

நிதி பரிமாற்றம்

நிதி பரிமாற்றம்

தீபாவளி என்றாலே உணவு, ஆடை, பட்டாசு, இனிப்பு எனப் பலவும் உண்மை, இதே நேரத்தில் அனைத்தையும் ஆன்லைன் ஆர்டர் மூலம் வாங்குவதும் தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான ஆன்லைன் தளத்தில் நிதி பரிமாற்றம் அதிகம் செய்யப்படும் காலம் என்பதால் சைபர் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் உண்டு என்பதால் பாதுகாப்பாகச் செயல்படுவது உத்தமம்.

பழைய பாஸ்வோர்டு

பழைய பாஸ்வோர்டு

ஆசிய பசிபிக் பகுதியில் அதிகமானோர் ஓரே பாஸ்வோர்டை பல தளத்திற்குப் பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இதுகுறித்துக் கூகுள் செய்த ஆய்வில் 80 சதவீதம் பேர் ஓரே பாஸ்வோர்டை 10க்கும் அதிகமாகத் தளத்திற்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏதேனும் ஒரு தளத்தில் பாஸ்வோர்டு ஹேக் செய்யப்பட்டால் அனைத்துத் தளத்தில் இருக்கும் தரவுகளும் பாதிக்கப்படும். இதில் உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வோர்டும் அடங்கும்.

பாதுகாப்பு வளையம்
 

பாதுகாப்பு வளையம்

நீங்கள் பயன்படுத்தும் தளத்திற்கு மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் மூலம் two-step verification சேவையைப் பயன்படுத்துவதன் பாதுகாப்பான உள்நுழைதலைக் கடைப்பிடிக்கலாம். உங்களுக்குத் தெரியாமல் வேறு யாரேனும் நுழைந்தாலும் தெரிந்துகொள்ள முடியும்.

ஷாப்பிங் கார்ட்

ஷாப்பிங் கார்ட்

நீங்கள் ஷாப்பிங் செய்யும் தளம் HTTPS பாதுகாப்பு கொண்டதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள், இதன் பின்பு ஷாப்பிங் துவங்கவும். குறிப்பாக HTTPS பாதுகாப்பு இல்லாத தளத்தில் நெட் பேங்கிங், யூபிஐ போன்ற எவ்விதமான நிதி பரிமாற்றம் தொடர்பான விஷயங்களைச் செய்ய வேண்டாம் எனக் கூகுள் கூறுகிறது.

சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல்

கொரோனா தொற்றுத் துவங்கியதில் இருந்து உலக நாடுகளில் சைபர் கிரைம் அளவுகள் சுமார் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் தனிநபர் முதல் நிறுவன தரவுகளைத் திருடப்படும் அளவீடு அதிகரித்துள்ளது. இதேபோல் மால்வேர், ரேன்சம்வேர் ஆகியவற்றைப் பரப்புவதும் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stay Safe While shopping online during Diwali season; 3 Tips from google

Stay Safe While shopping online during Diwali season; 3 Tips from google
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X