கொரோனா பாதிப்பால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு நிதியமைச்சகம் வாயிலாக 3வது பொருளாதார ஊக்க திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டு உள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஊரக வளர்ச்சி, விவசாயிகள் கடன் எனப் பல தரப்பு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. இதன் வெளிப்பாடு வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் மிகவும் குறைவான அளவிலான வர்த்தகத்தை மட்டுமே அடைந்துள்ளதை காட்டுகிறது.
இதுவரை மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகச் சுமார் 29.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்க திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் பெரும் பகுதி நாட்டின் வகைப்படுத்தப்பட்ட, வகைப்படுத்தபடாத துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இனி வேலைவாய்ப்புக்கு பிரச்சனையில்லை.. நிதியமைச்சரின் அடுத்தடுத்த அறிவிப்பு..!

Atmanirbhar Bharat 3.0
மத்திய அரசின் 3வது பொருளாதார வளர்ச்சி கொள்கையில் 12 முக்கியத் துறைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டுப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சந்தையில் டிமான்ட், முதலீடு, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை
இந்த அறிவிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செலலும் என நம்பப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் இதன் எதிரொலி தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 43,298.92 புள்ளிகளில் துவங்கிய நிலையில் அதிகப்படியாக 120 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது.

Nowcast ஆய்வறிக்கை
ரிசர்வ் வங்கி high-frequency data-ஐ பயன்படுத்தி ஆய்வு செய்து முதல் முறையாக வெளியிட்டுள்ள 'Nowcast'அறிக்கையில், செப்டம்பர் மாதம் நாட்டின் பொருளாதாரம் -8.6% வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் வீழ்ச்சி
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்திய பொருளாதாரம் சரிந்த நிலையில், தொடர்ச்சியாக 2 காலாண்டுகளாகப் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகல் இந்திய பொருளாதாரம் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது.

ரெசிஷன்
இந்த ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியின் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய பொருளாதாரம் technical recessionனுக்கு நுழைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மற்றும் அரசின் ஒப்புதல் பெற்ற தரவுகள் வருகிற நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது என்பது பொருள்.

விவசாயக் கடன்
இந்நிலையில் வியாழக்கிழமை நிதியமைச்சர் வெளியிட்ட 3வது பொருளாதார ஊக்க கொள்கையில் கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்குக் கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர். 1.4 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி துறை
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த Production Linked Incentives திட்டத்தின் கீழ் 10 முக்கியமான துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் நன்மை அடையும். இதனால் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்படும்.

ரியல் எஸ்டேட் விற்பனை
ரியல் எஸ்டேட் துறை விற்பனையை அதிகரிக்கச் சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படுகிறது. இதனால் வீடு வாங்குவோருக்கு அதிகளவிலான வருமான வரிச் சலுகை கிடைக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கருத்து
இதோடு வேலைவாய்ப்புகள் உருவாக்க பல முக்கிய அறிவிப்புகள் உள்ளது. இதைபற்றி முழுமையாகத் தெரிந்துக்கொள்ளக் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
சரி நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய அறிவிப்புகள் உங்களை ஈர்த்துள்ளதா..? இந்த அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என நீங்க நம்புகிறீர்களா..?